உள்ளூர் வாசிகளுக்கு ஸ்பெஷல் ஆண்டு சுங்கச்சாவடி பாஸ்.. மத்திய அரசு அசத்தல் திட்டம்!
New Annual Toll Pass Scheme | சுங்கச்சாவடிகளை ஒட்டி 20 கிலோ மீட்டர்களுக்கு வசிக்கும் பொதுமக்களுக்கு வசதியாக ஆண்டு பாஸ் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. மாதம் மாதம் புதுப்பிக்கும் வகையில் பாஸ் இருந்த நிலையில், இந்த முக்கிய மாற்றத்தை அரசு மேற்கொண்டுள்ளது.
சென்னை, அக்டோபர் 10 : சுங்கச்சாவடிகளை (Tollgate) ஒட்டி, 20 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் உள்ளூர் வாசிகளுக்கு வருடாந்திர பாஸ் திட்டத்தை அறிமுகம் செய்ய மத்திய அரசு (Central Government Of India) திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் சுங்கச்சாவடிகளை கடந்துச் செல்லும் வாகனங்கள் அதற்கான சுங்க கட்டணத்தை செலுத்த வேண்டும் என்பது கட்டாயமாக உள்ள நிலையில், இந்த முக்கிய நடவடிக்கையை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. இந்த நிலையில், சுங்கச்சாவடி பாஸ் குறித்த மத்திய அரசின் புதிட திட்டம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உள்ளூர் வாசிகளுக்கு ஸ்பெஷல் பாஸ் – மத்திய அரசு திட்டம்
தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளை சுற்றி, 20 கிலோ மீட்டர்கள் சுற்றளவில் வசிக்கும் உள்ளூர் வாசிகள் தற்போதுள்ள நடைமுறைப்படி, வணிக நோக்கமற்ற சொந்த வாகனங்களுக்கு ரூ.350 கட்டணம் செலுத்தி டிஜிட்டல் பாஸ்களை பெற்று அவற்றை ஒவ்வொரு மாதமும் புதுப்பித்து பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் பாஸை புதுப்பிப்பதால கூடுதல் கட்டணம் மற்றும் செலவு ஏற்படுவதாக பொதுமக்கள் தங்களது சிரமங்களை முன்வைத்து வந்தனர்.
இதையும் படிங்க : “தைரியமா இரு மா..” – தாராபுரம் திமுக வேட்பாளருக்கு ஆறுதல் சொன்ன மு.க.ஸ்டாலின்
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே புதுப்பிக்கும் வகையில் பாஸ்
இவ்வாறு பொதுமக்கள் எதிர்க்கொள்ளும் சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே புதுப்பிக்கும் வகையில் வருடாந்திர பாஸ் திட்டத்தை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் ஆணையம் வடிவமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தில் வழங்கப்படும் பாஸுக்கு ஆண்டு கட்டணம் ரூ.3,000 ஆக நிர்ணயம் செயப்பட உள்ளது. இதன் மூலம் உள்ளூர் வாசிகளுக்கு மாதம் மாதம் எடுக்கும் பாஸை விடவும் இதில் 28 சதவீதம் வரை சலுகை கிடைக்கும்.
இதையும் படிங்க : பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி – முதல்வர் விஜய் கருத்து
சுங்கச்சாவடிகளை ஒட்டி வசிக்கும் பொதுமக்கள் இந்த மாதாந்திர பாஸ் மூலம் சில சிரமங்களை சந்தித்து வந்த நிலையில், மத்திய அரசு இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. இது தொடர்பான முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.