Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நாதக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு… சீமான் எந்த தொகுதியில் போட்டி?

NTK Candidates List Release : நாம் தமிழர் கட்சியின் 100 சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார். இதில், சீமான் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற தகவலும் இதில் இடம் பெற்றுள்ளது .

நாதக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு… சீமான் எந்த தொகுதியில் போட்டி?
நாதக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 05 Dec 2025 17:50 PM IST

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுக்கான தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என்பன உள்ளிட்டவற்றில் முறையான திட்டங்களை வகுத்து தங்களை தயார் நிலையில் வைத்துள்ளனர். பாஜக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் எனவும், அதற்கான தொகுதிகளை சம்பந்தப்பட்ட கட்சி தலைமையிடம் கேட்டுப் பெறுவோம் என்று வெளிப்படையாகவே தெரிவித்துள்ளது.

234 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியும் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளது. அதன்படி, 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, 234 தொகுதிகளில் பாதிக்கு பாதி, அதாவது 117 தொகுதிகளில் பெண்களும், 117 தொகுதிகளில் ஆண்களும் போட்டியிட உள்ளனர்.

12 தொகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் வேட்பாளர்கள்

இதற்காக முதல் கட்டமாக 100 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இன்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) வெளியிட்டார். இதில், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டு, முதல் கட்டமாக 100 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 12 பொது சட்டமன்ற தொகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: தொடங்கியது கூட்டணி பேச்சுவார்த்தை.. முதல்வர் ஸ்டாலினை சந்தித்த காங்கிரஸ் ஐவர் குழு!!

சீமான் போட்டியிடும் தொகுதி எது

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் போட்டியிடுவதாக கூறப்படுகிறது. ஏனென்றால், அண்மையில் சிவகங்கையில் நடைபெற்ற கூட்டத்தில் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை சீமான் வெளியிட்ட போது காரைக்குடி தொகுதிக்கான வேட்பாளரை மட்டும் அவர் அறிவிக்காமல் இருந்தார். அதன் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

100 சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர்கள் பட்டியல்

சீமான் ஏற்கெனவே மானாமதுரையை சேர்ந்தவர் என்பதால், அந்த தொகுதியில் பட்டியலில் சமுதாயத்தினர் மட்டுமே போட்டியிட முடியும் என்பதால், அவர் அருகில் உள்ள காரைக்குடியில் போட்டியிடுவார் என்று தெரிகிறது. நாம் தமிழர் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட 100 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலில் விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் பெண் மருத்துவர் அபிநயாவும், நாகை மாவட்டம், வேதாரண்யம் தொகுதியில் இடும்பாவனம் கார்த்திக்கும், சேலம் மாவட்டம், மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா ராணி உள்ளிட்டோரின் பெயர்கள் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

மேலும் படிக்க: 234 வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்யும் நாம் தமிழர் கட்சி.. திருச்சியில் அடுத்த ஆண்டு மக்களின் மாநாடு..