வரும் 2026 ஆம் ஆண்டு, ஜனவரி 1 முதல், ஏசி அல்லாத ஸ்லீப்பர் கிளாஸ் பயணிகளுக்கும், ரயிலில் தலையணை, போர்வைகள் கிடைக்கப்போகிறது. இதுவரை இந்த வசதி ஏசி கோச்சுகளில் மட்டும் இருந்தது. ஆனால், இனி, சில தேர்ந்தெடுக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களில், ஸ்லீப்பர் கிளாஸ் பயணிகளும், இந்த சேவையை பெறலாம். தெற்கு ரயில்வேயின் சென்னை பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இது ஒரு புதிய முயற்சி என்று கூறப்பட்டுள்ளது.