இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் ஸ்மிருதி மந்தானா மற்றும் இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் திருமணத்தைச் சுற்றி, பரபரப்பு நீடிக்கும் நிலையில், கிரையோன்ஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் தற்போது பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. இருவரது திருமணமும் கடந்த நவம்பர் 23 ஆம் தேதி நடைபெறவிருந்தது. ஆனால் அதே நாளிலேயே ஸ்மிருதியின் தந்தை திடீரென உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், திருமணம் நிறுத்தப்பட்டன. அடுத்த நாள், பலாஷும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.