Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அதிமுகவிடம் 50 தொகுதிகள் குறி வைக்கும் பாஜக…எந்தெந்த தொகுதிகள் தெரியுமா!

BJP ask to 50 seats: 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிடம் 50 தொகுதிகளை கேட்க பாரதீய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான பட்டியலையும், வேட்பாளரையும் கட்சியின் தலைமை ஒப்புதல் வழங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அதிமுகவிடம் 50 தொகுதிகள் குறி வைக்கும் பாஜக…எந்தெந்த தொகுதிகள் தெரியுமா!
அதிமுகவிடன் பாஜக கூடுதல் தொகுதிகள் கேட்க முடிவு
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 05 Dec 2025 14:47 PM IST

தமிழகத்தில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் காலூன்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. இதன் மூலம், பாஜகவில் தற்போது உள்ள 4 எம் எல் ஏக்களின் எண்ணிக்கைகளை உயர்த்துவதற்கான நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளை விட 2026 சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளில், அதாவது சுமார் 50 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு பாஜக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அதிமுகவிடம் தமிழக பாஜக 50 தொகுதிகளை கேட்க உள்ளதாகவும், அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மக்களவை தேர்தலை அடிப்படையாக வைத்து…

அதன்படி, தமிழகத்தில் கடந்த 2024- ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சட்டமன்ற தொகுதி வாரியாக பாஜகவுக்கு எந்த தொகுதிகளில் அதிக வாக்குகள் கிடைத்ததோ, அதன் அடிப்படையில் சுமார் 50 தொகுதிகளின் பட்டியலை பாரதீய ஜனதா கட்சியின் தொகுதி தேர்தல் உயர் மட்ட குழு தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில், தென் மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் 15 தொகுதிகள் இந்த 58 தொகுதிகளின் எண்ணிக்கையில் வருகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் தென் மாவட்டங்களில் இருக்கும் தொகுதிகளில் 18 தொகுதிகளில் மட்டுமே அதிமுக கூட்டணி வெற்றி பெற்றிருந்தது.

மேலும் படிக்க: “அமித்ஷா அழைத்தாலும் செல்ல மாட்டேன்”.. டிடிவி தினகரன் திட்டவட்டம்!!

50 தொகுதிகள் கொண்ட பட்டியல்

இந்த நிலையில், அதிமுகவில் முக்குலத்தோர் சமுதாயத்தின் அதிருப்தி, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டி டி வி தினகரன் ஆகியோரின் விவகாரங்களால் பலவீனம் அடைந்திருப்பதாக கூறப்படும் அதிமுக அதிகமான தொகுதிகளில் போட்டியிட தயங்கினால், அந்த தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்குமாறு தமிழக பாரதீய ஜனதா கட்சி கேட்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதன்படி, தமிழகத்தில் நாகர்கோவில், விளவங்கோடு, நாங்குநேரி, திருச்செந்தூர், சாத்தூர், சென்னை, டி நகர், கோயம்புத்தூர் தெற்கு, பேராவூரணி, ராசிபுரம் என்று பாஜகவின் 50 சட்டமன்ற தொகுதிகளுக்கான பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களுக்கு டெல்லி பாஜக தலைமை ஒப்புதல் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

தொகுதி பங்கீட்டில் சிக்கல் வர வாய்ப்பு

இது ஒரு புறம் இருக்க பாரதீய ஜனதா கட்சி கேட்கும் சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பான்மையான தொகுதிகள் அதிமுகவின் தற்போதைய எம் எல் ஏக்களின் தொகுதிகள் என்பதால் தொகுதி பங்கீட்டில் அதிமுக மற்றும் பாஜக இடையே சிக்கல் வரும் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் திமுகவை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இதற்கு சம்மதம் தெரிவிக்குமா என்பது தேர்தல் நெருங்கும் நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையின் போது தான் தெளிவாக தெரிய வரும்.

மேலும் படிக்க: தனிக்கட்சி தொடங்குவதாக நான் கூறவே இல்லை…ஓபிஎஸ் அந்தர் பல்டி!