தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், டிசம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் தெலங்கானா ரைசிங் குளோபல் சம்மிட்டில், இரண்டு பெரிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவிருக்கின்றன. மேலும், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், தெலங்கானா அரசுடன் இணைந்து, புதிய திரைப்பட நகரம் உருவாக்கும் திட்டத்தில் கையெழுத்திடவிருக்கிறார்.