இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்…ரஷ்ய அதிபர் கொடுத்த பரிசு!
Putin Given Various Plans To India: இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பல்வேறு திட்டங்களை இந்தியாவுக்கு பரிசாக அளித்துள்ளார். மேலும், மேக் இன் இந்தியா திட்டத்தில் ரஷ்யாவின் முழு பங்கு இருக்கும் என்று உறுதி தெரிவித்துள்ளார் புதின்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 2 நாள் பயணமாக நேற்று தனி விமானம் மூலம் வியாழக்கிழமை (டிசம்பர் 4) இந்தியா வந்தடைந்தார். அவரை விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி உற்சாக வரவேற்பு அளித்து வரவேற்றார். இதைத் தொடர்ந்து, இன்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) நடைபெற்ற நிகழ்வில் ரஷ்ய அதிபர் புதின் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு பறிமாறிக் கொண்டனர். இந்த நிகழ்வில், இந்தியாவுக்கு பல்வேறு திட்டங்களை ரஷ்ய அதிபர் புதின் பரிசாக அளித்துள்ளார்.
இந்தியாவுக்கு தேவையான எரிசக்தி
அதன்படி, இந்த நிகழ்வில் ரஷ்ய அதிபர் புதின் பேசுகையில், வளர்ந்து வரும் இந்தியாவுக்கு எவ்வளவு எரிசக்தி தேவைப்படுகிறதோ இந்திய பொருளாதாரத்துக்கு ஏற்றவாறு எரிசக்தியை ஈடுகட்டுவதற்கான முழு ஆதரவை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இதே போல, யூரியா உற்பத்தியில் இணைந்து செயல்பட உள்ளோம். போக்குவரத்து வழியை செயல்படுத்துவது குறித்தும் திட்டமிட்டு வருகிறோம்.
மேலும் படிக்க: ரஷ்ய அதிபர் புதினுக்கு பகவத் கீதையை பரிசளித்த பிரதமர் மோடி!




கூடங்குளம் அனுமின் நிலையத்துக்கு முழு ஆதரவு
ரஷ்யா, பெலாரஸ், இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்துக்கு சிறந்த திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறோம். தூத்துக்குடி மாவட்டம், கூடங்குளத்தில் 6 அனுமின் உலைகள் செயல்பட்டு வரும் நிலையில், கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் மேலும், 4 அணுமின் உலைகளுக்கான பணிகளை விரைவாக முடித்து அதனை முழு திறனில் இயங்குவதற்கான தேவையான நடவடிக்கைகளை ரஷ்யா முன்னெடுக்கும்.
மேக் இன் இந்தியா திட்டத்தில் ரஷ்யா முழு பங்கு
இந்தியாவின் மின்சார தேவைகள் கணிசமான முறையில் ஈடு செய்யப்படும். மேக் இன் இந்தியா திட்டத்தில் ரஷ்யா முக்கிய பங்கு வகிக்கும். இது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்படும். இந்தியாவில் உள்ள பாதுகாப்புப் படையை நவீனமாக்குவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும், ஆதரவுகளையும் வழங்குவதற்கு நாங்கள் உறுதி அளிக்கிறோம். இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளுக்கான நவீன தளவாடங்களை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம்.
இந்திய பாதுகாப்பு படைகளுக்க நவீன ஆயுதம்
ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் உபகரணங்கள் மற்றும் ஆயுதங்கள் இன்றி அடுத்த கட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்குவதற்கு ரஷ்யா ஆதரவு அளிக்கும். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டுக்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது. இதற்கு இந்தியாவுக்கு தேவையான அனைத்து ஆதரவுகளையும் ரஷ்யா வழங்கும் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தார்.
மேலும் படிக்க: ஆரத் தழுவி வரவேற்றது முதல் பரிசளித்தது வரை.. ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடியின் ராஜ உபசரிப்பு.. தீயாய் பரவும் புகைப்படங்கள்!