இந்திய சினிமாவில் 60 வருடங்களுக்கும் மேலாக, திரை உலகை தனது கலைத்திறனாலும், புதுமை சிந்தனைகளாலும் வழிநடத்தி வருபவர் கமல்ஹாசன்,. இந்த நிலையில், அவர் தனது ஓய்வு குறித்து முதன்முறையாக திறந்த மனதுடன் பேசியுள்ளார். மனோராமா கலை, இலக்கிய விழாவில் கலந்து கொண்ட அவர், என் ஓய்வை முடிவு செய்யப் போறது நான் இல்லை, என் ரசிகர்கள் தான் என்றார். புதியவர்கள் வரவேண்டும். ஆனால் பழையவர்களை ஓய்வு எடுக்க சொல்வது சரியா? அதை ரசிகர்கள் முடிவு செய்ய வேண்டும். யாரும் என்னிடம் பிரேக் எடுங்கள் என்று சொல்லவில்லை. ஆனால் நான் அதனை பற்றி யோசித்து வருகிறேன். என் நண்பர்கள் கூட, ஒரு நல்ல படம் செய்து விட்டு ஓய்வெடுங்கள் என்கிறார்கள்.