வீட்டின் முன் விளையாடிய 3 வயது சிறுமி மாயம்: ஆற்றில் சடலமாக மீட்பு – தென்காசி அருகே பரபரப்பு
Tenkasi Missing Girl Case : தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே, வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போன 3 வயது சிறுமி, அருகிலுள்ள ராமநதி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி, ஆகஸ்ட் 17 : தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே, வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போன 3 வயது சிறுமி, அருகிலுள்ள ராமநதி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடையநல்லூர் அருகே உள்ள ரவணசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ரசூல் மைதீன். இவரது மகள் அஹமது ஹாஜிரா.
வீட்டின் முன் விளையாடிய 3 வயது ஆற்றில் சடலமாக மீட்பு
இவர் அக்டோபர் 16, 2026 நேற்று மாலை, வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார். இந்த நிலையில் சிறிது நேரம் கழித்து பெற்றோர் பார்த்தபோது சிறுமி காணாமல் போனது தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து சிறுமியைக் காணாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோரும் உறவினர்களும் அக்கம்பக்கம் உள்பட பல்வேறு இடங்களில் தேடினர். எங்கும் கிடைக்காததால், உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிக்க : மது பிரியர்களுக்கு சூப்பர் நியூஸ்! டாஸ்மாக் கடைகளில் 4 புதிய பீர் வகைகள் அறிமுகம்! விற்பனை எப்போது?




தகவலறிந்து விரைந்து வந்த கடையம் போலீசார், சிறுமியின் வீட்டுக்கு அருகே வசிப்பவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். சிறுமியின் வீட்டுக்கு அருகே ராமநதி ஆறு ஓடுவதால், சிறுமி ஆற்றில் தவறி விழுந்திருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, ஆலங்குளம் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் முன்னிலையில் ராமநதி ஆற்றில் தேடுதல் பணியைத் தொடங்கினர்.
பல மணி நேரம் நீடித்த தேடுதலுக்குப் பிறகு, நள்ளிரவில் சிறுமி ஆற்றில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். மீட்கப்பட்ட உடல், பிரேதப் பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மகளின் உடலைக் கண்டு பெற்றோரும் உறவினர்களும் கதறி அழுதனர்.
காரணம் குறித்து விசாரணை
இந்தச் சம்பவம் தொடர்பாக கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விளையாடச் சென்ற சிறுமி தவறுதலாக ஆற்றில் விழுந்து மூழ்கி உயிரிழந்தாரா, அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணங்களில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உயிரிழப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலமுண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேலு என்பவரின் இளைய மகளான 7 வயது சிறுமி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்திருக்கிறார். இந்த நிலையில் காலையில் எழுந்து பார்த்தபோது சிறுமியை காணாததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் வீடுகளில் தேடியும் சிறுமி கிடைக்காததால், தாய் பவானி சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் கண்ணீருடன் புகார் அளித்தார்.
இதையும் படிக்க : மது போதையில் முற்றிய வாக்குவாதம்.. இரண்டு குழந்தைகளின் தந்தை நண்பரால் வெட்டி கொடூரக் கொலை!!
புகாரைப் பதிவு செய் விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணையில் இறங்கினர். ஆலமுண்டி கிராமத்தைச் சுற்றியுள்ள கிணறுகள், விவசாய நிலங்கள், அடர்ந்த கரும்புத் தோட்டங்கள் மற்றும் அதை ஒட்டியுள்ள மலைப் பகுதிகளில் மோப்ப நாய் மற்றும் ட்ரோன் கேமராக்கள் உதவியுடன் காவல்துறையினர் அ அங்குலம் அங்குலமாகத் தேடினர். அத்துடன், சம்பவத்தன்று அப்பகுதியில் பதிவான செல்போன் கோபுர எண்களைக் கைப்பற்றி, சந்தேகத்திற்குரிய நபர்களின் முகவரிகளை வைத்துத் தனிப்படை போலீசார் ஒருபுறம் விசாரணை நடத்தி வருகின்றனர். கிட்டத்தட்ட 6 நாட்களுக்கு மேலாகியும் சிறுமி கிடைக்காததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.