AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“தமிழகத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் அதிகரிக்க திமுக அரசே காரணம்!” – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

Minister Nirmal Kumar On DMK: ஜாபர் சாதிக் என்ற நபர் தொடர்புடைய விவகாரங்களுக்குப் பிறகுதான் தமிழகத்தில் மெத்தம்பெட்டமைன் புழக்கம் அதிகரித்ததாக அவர் தெரிவித்தார். மேலும், போதைப்பொருள் விவகாரத்தில் யாராக இருந்தாலும், எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

“தமிழகத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் அதிகரிக்க திமுக அரசே காரணம்!” – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 17 Oct 2026 12:01 PM IST

அக்டோபர் 17, 2026: தமிழகத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்ததற்கு கடந்த திமுக ஆட்சியே முக்கியக் காரணம் என்று அமைச்சர் நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மின் கொள்முதல், ஸ்மார்ட் மீட்டர் ஒப்பந்தம் மற்றும் மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு விவகாரம் குறித்தும் அவர் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

100 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல்!

இலங்கையை மையமாகக் கொண்டு சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாகக் கூறப்படும் நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூரைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக ஒன்றிய செயற்குழு உறுப்பினர் பூபாலனுக்குப் போதைப்பொருள் கடத்தலில் தொடர்பு இருப்பதாகப் புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

சுமார் எட்டு மணி நேரம் நடைபெற்ற சோதனையில் 100 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பூபாலனை அதிகாரிகள் கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரைக் கட்சியில் இருந்து நீக்கி தமிழக வெற்றிக் கழகத் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

“ஜாபர் சாதிக் வந்த பிறகுதான் மெத்தம்பெட்டமைன் அதிகரித்தது!”

இந்த விவகாரம் தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், தமிழகத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்ததற்கு கடந்த திமுக ஆட்சியே காரணம் என்று குற்றம்சாட்டினார்.

ஜாபர் சாதிக் என்ற நபர் தொடர்புடைய விவகாரங்களுக்குப் பிறகுதான் தமிழகத்தில் மெத்தம்பெட்டமைன் புழக்கம் அதிகரித்ததாக அவர் தெரிவித்தார். மேலும், போதைப்பொருள் விவகாரத்தில் யாராக இருந்தாலும், எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

திமுக ஆட்சிக் காலத்தில் போதைப்பொருள் பறிமுதல் தொடர்பான விவகாரங்கள் முறையாகக் கையாளப்படவில்லை என்றும் அவர் விமர்சித்தார். ராமநாதபுரத்தில் போதைப்பொருள் கிடைத்தபோது அதை உரம் எனக் கூறி மறைக்க முயன்றதாகவும் குற்றம்சாட்டினார்.

எடப்பாடி பழனிசாமி மீது விமர்சனம்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்துப் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், அதிமுகவைத் தனது சொந்தக் குடும்ப நலனுக்காக நடத்துவதாகவும், கட்சியைத் தனது சொந்த லெட்டர் பேடு கட்சியாக மாற்றிவிட்டதாகவும் விமர்சித்தார்.

மேலும் படிக்க: “தவெகவில் எத்தனை லியோ தாஸ், பவுடர் சரத்கள் இருக்கிறார்கள்?”.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவை நடத்துவதற்கான தகுதி இல்லை என்றும், அவர் முதல்வரானது டெண்டர் முறையின் மூலம் எனவும் குற்றம்சாட்டினார். எடப்பாடி பழனிசாமி திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக எடுத்த முடிவால் தான் இவ்வளவு இடைதேர்தலே வருகிறது. இதில் குதிரை பேரம் நடக்கவில்லை. எடப்பாடி பழனிசாமியை சந்திக்க முடியாததால் தான் சி.வி.சண்முகத்தை சந்தித்தார் முதல்வர் விஜய் என குறிப்பிட்டார்.

மின் கொள்முதல், ஸ்மார்ட் மீட்டர் ஒப்பந்தம் குறித்து விளக்கம்!

மின் கொள்முதல் விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர், மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதல் செய்யப்படுவதாகக் குறிப்பிட்டார். எரிவாயு மின் உற்பத்திக்கான செலவுகள் அதிகமாக இருப்பதால், அதற்கேற்ப மின்சாரம் வாங்கப்படுவதாகவும் விளக்கமளித்தார்.

மேலும் படிக்க: திமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட டெண்டர் ரத்து.. 7 மாவட்டங்களில் சாலையோர வசதி மையங்கள் அமைக்கும் திட்டத்தை கைவிட்டது தவெக அரசு!!

தற்போதைய தமிழக அரசின் நிர்வாக நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அவர், முந்தைய திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட ஒப்பந்தங்களில் முறைகேடுகள் இருந்ததாகக் கூறப்படும் காரணங்களால் சில ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்தார். ஸ்மார்ட் மீட்டர் ஒப்பந்தமும் சீரமைக்கப்படுவதால், பணிகளைத் தொடங்குவதற்கு மேலும் இரண்டு மாதங்கள் ஆகலாம் என்றும் கூறினார்.

இடஒதுக்கீடு விவகாரத்தில் சட்டத் திருத்தம்!

மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து தொடர்பான வழக்கில், அனைத்து இஸ்லாமியக் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்திய பின்னரே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் திமுக அரசு உரிய சட்டத் திருத்தத்தை அப்போதே கொண்டு வந்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், இடஒதுக்கீடு தொடர்பான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

Follow Us