விடுபட்ட அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1,000: உதயநிதி ஸ்டாலின் கொடுத்த சூப்பர் அப்டேட்!!

Magalir urimai thogai: ரேஷன் அட்டையில் உள்ள நபர்களில் யாரேனும் ஒருவர் வருமான வரி செலுத்தினால் அந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிமைத் தொகை கிடையாது. விடுப்பட்ட மீதமுள்ள அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 கிடைக்க செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

விடுபட்ட அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1,000: உதயநிதி ஸ்டாலின் கொடுத்த சூப்பர் அப்டேட்!!

உதயநிதி ஸ்டாலின்

Updated On: 

03 Nov 2025 15:58 PM

 IST

சென்னை, நவம்பர் 03: விடுபட்ட அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். டிசம்பர் மாதத்திற்குள் விடுபட்டவர்களுக்கு ரூ.1000 வழங்குவதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.  2021ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு, ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ என்ற பெயரில் ரேஷன் கார்டு வைத்துள்ள தகுதியான மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவதாக அறிவித்திருந்தது. அந்தவகையில், கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தகுதியான பெண்களுக்கு அவர்களின் வங்கிக்கணக்கில் மாதம்தோறும் ரூ.1000 செலுத்தி  வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 1 கோடியே 16 லட்சம் பெண்கள் மாதம் ரூ.1000 வாங்கி வருகின்றனர். அதன்படி, கடந்த 26 மாதங்களாக வழங்கப்பட்டு வரும் இத்திட்டத்தால், 30,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.

எங்களுக்கும் ரூ.1000 வேண்டும்:

அதேசமயம், மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் தங்களுக்கும் உரிமைத் தொகை கிடைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து, விடுப்பட்டவர்களும் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்தது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்பட்டு அதில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

Also read: கல்லூரி மாணவிக்கு நள்ளிரவில் நேர்ந்த கொடூரம்.. தமிழகத்தையே உலுக்கும் திடுக் சம்பவம்!!

நவ.30க்குள் பரிசீலனை:

இதில், புதிதாக ரேஷன் கார்டு வாங்கியவர்கள், தளர்வுகள் அறிவிக்கப்பட்டவர்கள் என ஏராளமானோர் புதிதாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தனர். இதில், இதுவரை சுமார் 28 லட்சம் மகளிர் விண்ணப்பம் அளித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டடது. இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணி வருவாய்த்துறை மூலமாக நடந்து வருகிறது. நவ.30ம் தேதிக்குள் அவர்கள் இப்பணிகளை பரிசீலித்து முடிக்க உள்ளனர்.

வருமான வரி செலுத்தும் குடும்பத்தினரை தவிர்த்து மற்ற குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என கூறப்பட்டது. எனினும், பல்வேறு காரணங்களை கூறி அதிகாரிகள் விண்ணப்பங்களை நிராகரிப்பதாக பொது மக்கள் பலர் அமைச்சர்களிடம் முறையிட்டு வந்தனர்.

அனைவருக்கும் ரூ.1000:

இந்நிலையில், விடுபட்டவர்கள் அனைவருக்கும் கண்டிப்பாக மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அரசு விழா ஒன்றில் பேசிய அவர், தமிழகத்தில் கடுமையான நிதி நெருக்கடியிலும் கூட மகளிர் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மீது முதல்வர் ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி வருகிறார். விடுபட்டவர்கள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.

Also read: வாக்காளர் சிறப்பு திருத்தம்.. தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்? – தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம்..

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், விடுபட்டவர்கள் வாக்குகள் தங்களுக்கு கிடைக்காமல் சென்றுவிடும் என்ற வகையில் யோசித்த திமுக, தற்போது விடுபட்ட மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் பணிளை தீவிரப்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Follow Us
Related Stories
V. V. Rajan Chellappa Tamil Nadu Election: தேர்தலில் கவனம் பெறும் திருப்பரங்குன்றம் தொகுதி.. மீண்டும் வசமாக்குவாரா வி.வி.ராஜன் செல்லப்பா!
Raja Kannappan Tamil Nadu Election: முதுகுளத்தூர் தொகுதியில் முத்திரை பதிப்பாரா ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்!
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை… தொல்.திருமாவளவன் திடீர் முடிவு.. பின் வாங்க என்ன காரணம்!
Ruby R. Manoharan Tamil Nadu Election: நாங்குநேரி தொகுதியை தக்க வைத்துக் கொள்வாரா ரூபி ஆர்.மனோகரன்!
வேட்பு மனுவில் குளறுபடி… பெரம்பூர் தொகுதியில் விஜய்யின் திருத்தப்பட்ட பிரமாண பத்திரம் தாக்கல்!
தமிழகத்துக்கான ஜி.எஸ்.டி. வரி வருவாய் எங்கே செல்கிறது.. வெள்ளை அறிக்கை வெளியிட்டு பியூஷ் கோயல் கேள்வி!
மறைந்த பாடகர் எஸ்பிபிக்கு கேரளாவில் பிரம்மாண்ட சிலை - ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்பு
உணவளித்தவரின் மரணத்துக்கு வந்து இரங்கல் தெரிவித்த குரங்கு - வைரல் வீடியோ
விண்ணில் ஏவப்பட்ட நாசாவின் ஆர்டெமிஸ் 2 விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் - பரபரப்பு தகவல்
ரூ.50,000க்காக ஏற்பட்ட தகராறு... வெளிச்சத்துக்கு வந்த மிகப்பெரிய கிட்னி கடத்தல் கும்பல் நெட்வொர்க்