Tamil Nadu ByElection 2026: மதுராந்தகம், தாராபுரத்தில் நடக்கும் இடைத்தேர்தல்.. வெற்றியை தீர்மானிக்கும் பெண் வாக்காளர்கள்..
Madurantakam Dharapuram Bypoll: மதுராந்தகம் தொகுதியில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 27 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மதுராந்தகம் தொகுதியில் 2.13 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்வார்கள். இந்த 2.13 லட்சம் வாக்காளர்களில், 1.08 லட்சம் பேர் பெண்கள் ஆவர். 1.04 வாக்காளர்கள் ஆண்கள் ஆவர்.
அக்டோபர் 6, 2026: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்களான மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகள் காலியாக அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று (அக்டோபர் 6) காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
5 முனைப்போட்டி:
VIDEO | Tamil Nadu bypolls: Voting begins at CSI middle school polling booth in Madurantakam in Chengalpattu.
#TamilNaduBypolls #TamilNaduNews
(Full video available on PTI Videos – https://t.co/d8jp61yd2p) https://t.co/rgxR0XQ2mf
— Press Trust of India (@PTI_News) October 6, 2026
சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவிய நிலையில், இந்த இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் இடதுசாரிகள் என ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது. இரு தொகுதிகளிலும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிப்பதில் அவர்களின் வாக்குகள் முக்கியத்துவம் பெறும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க: ‘அண்ணன் சீர்’ திட்டம்.. 8 கிராம் தங்க நாணயம் பெற தகுதிகள் என்னென்ன? அரசாணையில் எதிர்பாராத மாற்றங்கள்.. வெடித்தது சர்ச்சை!!
ஐந்து முனைப் போட்டி நிலவினாலும், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் பிரதான போட்டி தமிழக வெற்றிக் கழகம், அதிமுக மற்றும் திமுக ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையேதான் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றியை தீர்மானிக்கும் பெண் வேட்பாளர்கள்:
மதுராந்தகம் தொகுதியில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 27 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மதுராந்தகம் தொகுதியில் 2.13 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்வார்கள். இந்த 2.13 லட்சம் வாக்காளர்களில், 1.08 லட்சம் பேர் பெண்கள் ஆவர். 1.04 வாக்காளர்கள் ஆண்கள் ஆவர்.
தாராபுரம் தொகுதியில் 2,23,036 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,07,285 பேர் ஆண்கள், 1,16,133 பேர் பெண்கள் மற்றும் 27 பேர் ராணுவத்தினர். தொகுதியில் 156 மையங்களில் 320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 1,536 வாக்குச்சாவடி பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பு.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று வாக்குப்பதிவு.. களம் எப்படி இருக்கும்?
வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் பதிவேடுகள் திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. அக்டோபர் 9ஆம் தேதி இரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.