Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பெண் வழக்கறிஞருக்கு நடந்த கொடுமை.. நீதிமன்றத்திலேயே கண்கலங்கிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!

Madras High Court Judge Anand Venkatesh : பெண் வழக்கறிஞரின் வீடியோவை 48 மணி நேரத்தில் நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். அதோடு, இந்த வழக்கின்போது, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கண்கலங்கினார். மேலும், அந்த பெண் வழக்கறிஞரை சந்திக்க விரும்புவதாகவும் அவர் கூறி நீதிமன்றத்திலேயே கண்கலங்கினார்.

பெண் வழக்கறிஞருக்கு நடந்த கொடுமை.. நீதிமன்றத்திலேயே கண்கலங்கிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 09 Jul 2025 18:02 PM

சென்னை, ஜூலை 09 : சென்னை உயர் நீதிமன்றம் (Madras High Court) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் (Anand Venkatesh) விசாரணையின்போது கண்கலங்கி உள்ளார். இணையத்தில் வெளியான பெண் வழக்கறிஞர் வீடியோவை 48 மணி நேரத்தில் அகற்ற உத்தரவிட்ட அவர், அந்த பெண் வழக்கறிஞரை நேரில் சந்தித்து பேச விரும்புவதாக கூறி கண்கலங்கி உணர்ச்சிவசப்பட்டது அங்கிருந்தவர்களையும் கண்கலங்க செய்தது.  பெண் வழக்கறிஞர் ஒருவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, ஒருவரை காதலித்துள்ளார். மேலும், தனது காதலன் திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்ததை அடுத்து, அவருடன் அந்த பெண் வழக்கறிஞர் நெருக்கமாக இருந்துள்ளார். அப்போது, அந்த நபர் நெருக்கமாக இருப்பதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, அந்த வீடியோக்களை நீக்க கோரி, மத்திய அரசிடம் முறையிட்டார்.

ஆனால், எந்த பதிலும் அளிக்காத பட்சத்தில், வீடியோக்களை நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு 2025 ஜூலை 9ஆம் தேதியான இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இணையத்தில் வெளியான வீடியோக்களை 48 மணி நேரத்தில் அகற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.

Also Read : ராமேஸ்வரம்: ஹோட்டல் அறைகளாக மாறும் ரயில் பெட்டிகள்… ஒப்பந்தம் எடுக்க ரயில்வே அழைப்பு..!

பெண் வழக்கறிஞருக்கு நடந்த கொடுமை

இதேபோன்ற வழக்கில் மத்திய அரசுககு டெல்லி உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறது. அந்த உத்தரவுகளை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கில் டிஜிபியையும் எதிர்மனு தாரராக சேர்த்து உத்தரவு பிறப்பித்தார்.

தொடர்ந்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நீதிமன்றத்திலேயே கண்கலங்கி உள்ளார். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கண்கலங்கியபடி, இந்த பெண் வழக்கறிஞர் என் மகளாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன் என கூறினார்.

கண்கலங்கிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

மேலும், அந்த பெண் வழக்கறிஞருக்கு தைரியமான வார்த்தைகளை வழங்குவதற்காக அந்த பெண்ணை சந்திக்க வேண்டும் எனவும் நீதிபதி கூறினார். மேலும், “இப்போது, ​​நான் என்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அவருடன் உரையாடும்போது நான் சோர்வடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என கூறினார்.

Also Read : லாக்கப் டெத் அஜித்குமார் மரணம் மறைவதற்குள் கள்ளக்குறிச்சியில் மீண்டும் ஒரு சம்பவம்…

மனுதாரர் ஒரு வழக்கறிஞராக இருந்ததால் சமூகத்தில் உள்ள ஒரே மாதிரியான கருத்துக்களை எதிர்த்துப் போராட முடிந்தது என்றும் நீதிபதி கூறினார். மேலும், “அதிர்ஷ்டவசமாக, அவர் இந்தத் தொழிலில் இருக்கிறார். இங்குள்ள நம் அனைவரின் உதவியும் அவருக்கு உள்ளது. போராட தைரியம் இல்லாதவர்களுக்கு என்ன நடக்கும். ஒவ்வொரு தனிநபரின் கண்ணியத்திற்கான அடிப்படை உரிமையை உறுதி செய்வது அரசு மற்றும் நீதிமன்றங்களின் கடமை” என கூறினார்.