கர்நாடகா முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா
கர்நாடகா முதல்வர் சித்தராமையா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து மே 28, 2026 இன்று பிற்பகல் ஆளுநரை சந்தித்த அவர் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதனையடுத்து தற்போதைய கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் தற்போது முதல்வராக உள்ளார்.
பெங்களூரு, மே 28 : கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா மே 28, 2026 ராஜினாமா செய்துள்ளார். ஆளுநர் வெளியூரில் இருந்த காரணத்தினால், முதலமைச்சர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரின் முதன்மைச் செயலாளரிடம் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து தற்போதைய துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கர்நாடக முதல்வராக மே 29, 2026 அன்று பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகா முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா
கடந்த 2023 ஆம் ஆண்டு கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. முதல்வர் பதவிக்கு டி.கே. சிவகுமார் மற்றும் சித்தராமையாவிடம் கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சித்தராமையா, மே 20. 2023 அன்று இரண்டாவது முறையாக கர்நாடக முதலமைச்சராகப் பதவியேற்றார். டி.கே. சிவகுமாருக்கு, துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. அப்போதே 2.5 ஆண்டுகள் சித்தராமையா முதல்வராக இருப்பது, அடுத்த 2.5 ஆண்டுகள் டி.கே.சிவக்குமார் முதல்வராக இருப்பது என முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.




இதையும் படிக்க : எரிபொருள் விலை உயர்வு.. உள்நாட்டு விமானச் சேவைகளை அதிரடியாகக் குறைக்க திட்டம்.. ஷாக் தகவல்!!
இந்த நிலையில் மே 28, 2026 இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காலை உணவு விருந்தின்போது, கட்சியின் மேலிட உத்தரவின்படி தான் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக சித்தராமையா அமைச்சர்களிடம் நேரடியாகத் தெரிவித்தார். அப்போது, உணர்ச்சிவசப்பட்ட அவர் கண்கலங்கிய ஒரு நெகிழ்ச்சியான சம்பவமும் நிகழ்ந்தது. அப்போது பேசிய அவர், நான் ஆற்றிய பணிகளில் எனக்கு முழுத் திருப்தி உள்ளது. நாம் அனைத்துத் திட்டங்களையும் வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளோம். நீங்கள் தொடர்ந்து நல்ல பணிகளைச் செய்யுங்கள் என்று அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்த சித்தராமையா
#WATCH | Bengaluru | Karnataka CM Siddaramaiah gets emotional as he speaks about his tenure
He resigned from the CM post today. His resignation is yet to be accepted by the Karnataka Governor. pic.twitter.com/4FDxBaxCoL— ANI (@ANI) May 28, 2026
இதையும் படிக்க : முன்னாள் முதல்வர் பிணராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. கேரளாவில் பரபரப்பு..
கர்நாடக மாநில காங்கிரஸில் கடந்த ஓராண்டாக முதல்வர் மாற்றம் குறித்து கடுமையாக விவாதங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. குறிப்பாக சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் ஆகியோரின் ஆதரவாளர்கள் ஒருவருக்கொருவர் எதிராக அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், ஐந்து மாநிலத் தேர்தல்களைத் தொடர்ந்து, இரு தலைவர்களையும் டெல்லிக்கு அழைத்திருந்த கட்சியின் மேலிடத் தலைவர்கள், அவர்களுடன் ஒரு நீண்ட ஆலோசனைக்கூட்டத்தை நடத்தினர். பல்வேறு விவகாரங்களை அலசி ஆராய்ந்து, ஒரு இறுதி முடிவுக்கு வந்த பிறகு, சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் கேட்டுக்கொண்டனர். அதன்படி, சித்தராமையா தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.