இந்திய தனித்துவ அடையாள ஆணையம் , மைஆதார் போர்டல் மூலம் இலவசமாக ஆன்லைனில் ஆதார் ஆவணங்களை புதுப்பிக்கும் காலக்கெடுவை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டித்து, 2027 ஜூன் 14 வரை அமல்படுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதார் விவரங்களை புதுப்பிக்காதவர்கள், தங்களின் அடையாளம் மற்றும் முகவரி சான்று ஆவணங்களை இனி எந்த கட்டணமும் இன்றி ஆன்லைன் மூலம் புதுப்பித்துக்கொள்ளலாம்.