ஷாப்பிங் செல்பவர்களின் பைகளை சுமந்து செல்ல Carrymen சேவை.. டெல்லியில் அறிமுகம்!
Carrymenn Service Started In Delhi | வீட்டில் இருந்தே பொருட்களை வாங்கிக்கொள்ள ஸ்விக்கி, சொமேட்டோ உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், ஷாப்பிங் செல்பவர்களின் பைகளை சுமந்து செல்ல, வரிசையில் நிற்க கேரிமேன் என்ற சேவை தலைநகர் டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஷாப்பிங் செல்பவர்களின் பைகளை சுமந்து செல்லும் புதிய சேவை ஒன்று தலைநகர் டெல்லியில் (Delhi) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Carry Men என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சேவையில் பைகளை சுமந்து செல்வது, வரிசையில் நிற்பது உள்ளிட்ட சேவைகள் அடங்கும். புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வசதி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய சேவை குறித்து விரிவாக பார்க்கலாம்.
தலைநகர் டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய சேவை
இந்தியாவில் நாளுக்கு நாள் புதிய புதிய சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. முன்பெல்லாம் ஏதேனும் பொருளை வாங்க வேண்டும் என்றால் கடைகளுக்கு ஏறி, இறங்கி வாங்க வேண்டிய சூழல் இருந்தது. ஆனால், தற்போது அதற்கான அவசியம் இல்லை. வீடு தேடியே பொருட்கள் டெலிவரி செய்யப்படுகின்றன. காய்கறிகள், பழங்கள், உணவு வகைகள், உடைகள், வீட்டிற்கு தேவையான பொருட்கள் என அனைத்துமே இந்த சேவைகள் மூலம் பொதுமக்களின் வீடுகளை தேடி விநியோகம் செய்யப்படுகின்றன.
இதையும் படிங்க : பெங்களூரில் ஏர் இந்தியா விமானம் விபத்து… “டெய்ல் ஸ்ட்ரைக்” குறித்து பரபரப்பு தகவல்!
இந்த சேவைகளுக்கு மத்தியில் தான் தற்போது புதிய சேவை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, பைகளை எடுத்துச் செல்லும் கேரிமேன் என்ற சேவை தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சேவை மெதுவாக பிற மாநிலங்களிலும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்ப்பாகப்படுகிறது.
இதையும் படிங்க : திடீர் ட்ரெண்டான கரப்பான்பூச்சி கட்சி.. சோஷியல் மீடியாவில் குவியும் ஆதரவாளர்கள்.. என்ன நடந்தது?
கேரிமேன் – என்ன என்ன சேவைகளை பெறலாம்?
இந்த கேரிமேன் சேவையில் நீண்ட நேரம் வரிசையில் நிற்பது, பொருட்கள் பைகளை சுமந்து செல்வது உள்ளிட்ட சேவைகளை பெறலாம். இந்த சேவையில் அதிகபட்சமாக 12 கிலோ எடை வரை 1 மணி நேரத்திற்கு சுமக்க ரூ.149 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சேவை விரைவில் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களிலும் அமலுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.