ஹேப்பி நியூஸ்! மே 2 வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Rain Alert : கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் மக்களுக்கு நிம்மதி அளிக்கும் விதமாக ஒரு அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவத்துள்ளது. அதன் படி மே 2 வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஹேப்பி நியூஸ்! மே 2 வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Rain Alert

Updated On: 

26 Apr 2026 16:28 PM

 IST

கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் கொடைக்கானல் மற்றும் ஊட்டி போன்ற மலை பிரதேசங்களில் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் மக்களுக்கு நிம்மதி அளிக்கும் விதமாக ஒரு அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவத்துள்ளது. கடுமையான வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி உள் கர்நாடகா முதல் குமரிக் கடல் பகுதி வரை வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பகுதி காணப்படுவதாகவும் இது லேசான மழைக்கு காரணமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

மே2 வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவடங்கள், தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஏப்ரல் 27 முதல் 29, 2026 வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது. தமிழ்நாட்டின் மற்ற பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் என அறிிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : ரயில், பேருந்துகளில் இடமில்லை… விமான கட்டணம் கட்டுப்படியாகவில்லை.. கடும் விலை உயர்வால் தவிக்கும் பயணிகள்!

அதே போல நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஏப்ரல் 30, 2026 அன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என அறிவிக்கப்ப்டடுள்ளது. அதனைத் தொடர்ந்து நீலகரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் மே 1 முதல் 2, 2026 வரை இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் மற்ற தமிழக பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏப்ரல் 26, 2026 அன்று வானம் வாகமூட்டத்துடன் இருக்கும். குறிப்பாக அதிகபட் வெப்பநிலையானது 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் இருக்கும் எனவும் குறைந்தபட்ச வெப்ப நிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் பதிவாகக் கூடும் என்று கூறப்பட்டது.

இதையும் படிக்க : ஆட்டோ LPG எரிவாயு தட்டுப்பாடு? இந்திய எண்ணெய் நிறுவனம் கொடுத்த விளக்கம்!!

அதே போல ஏப்ரல் 27, 2026 அன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னையின் அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதற்கேற்ப முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

Follow Us
Related Stories
வெயிலின் தாக்கம்: பட்டாசு ஆலைகளுக்கு மத்திய அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள்
“தோல்வி பயத்தில் ரௌடிசம் செய்யும் திமுக”.. ஆதவ் அர்ஜுனா கடும் குற்றச்சாட்டு!
மகளைக் கொன்ற இளைஞர் ஜாமீனில் விடுதலை.. 5 மாதம் காத்திருந்து பழிதீர்த்த தந்தை.. தஞ்சையில் பயங்கரம்!!
மிரட்ட வரும் மே மாதம்.. 40 டிகிரி வரை எகிறும் வெப்பநிலை.. உஷாரா இருங்க மக்களே.. எச்சரிக்கும் பிரதீப் ஜான்!
ரயில், பேருந்துகளில் இடமில்லை… விமான கட்டணம் கட்டுப்படியாகவில்லை.. கடும் விலை உயர்வால் தவிக்கும் பயணிகள்!
கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் லாரி.. திமுக நிர்வாகி உள்பட இருவர் பலி.. கோயிலுக்கு சென்று திரும்பிய போது சோகம்!
சிஇடி தேர்வு எழுத வந்த மாணவிகளின் மூக்குத்தியை அகற்ற சொன்னதால் பரபரப்பு
ஈரானில் அரசியல் அமைப்பில் திடீர் மாற்றங்கள் - என்ன காரணம்?
வெள்ளி விலை சரிவு, தங்கம் மற்றும் எண்ணெய் விலை உயர்வு
அதிக காய்கறி பழங்கள் சாப்பிட்டால் புற்றுநோய் அபாயமா? புதிய ஆய்வு சொல்வது என்ன?