AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“SIR மூலம் தான் மு.க.ஸ்டாலின் தோற்கடிப்பு”.. அமைச்சர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பிய திருமாவளவன் பேச்சு!

Thirumavalavan Speech about mk stalin: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரைக் கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், SIR முறையைப் பயன்படுத்தி பாஜாகவின் கொள்கை எதிரிகளான முக ஸ்டாலின், மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால் ஆகியோர் தோற்கடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

“SIR மூலம் தான் மு.க.ஸ்டாலின் தோற்கடிப்பு”.. அமைச்சர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பிய  திருமாவளவன் பேச்சு!
திருமாவளவன்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 15 Oct 2026 14:37 PM IST

சென்னை, அக்.16: இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளைக் கண்டித்து, சென்னையில் ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தவெகவை சேர்ந்த அமைச்சர்கள் ராஜ்மோகன் உள்ளிட்டோரும் கலந்தகொண்டனர். இந்நிலையில், இதில் கலந்து கொண்டு பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், பாஜாக அரசையும் தேர்தல் ஆணையத்தையும் கடுமையாகச் சாடிப் பேசினார். தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர் (SIR) நடைமுறையானது, பாஜாகவிற்கு எதிரான அரசியல் தலைவர்களைத் திட்டமிட்டு வீழ்த்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று அவர் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதையும் படிக்க: முதல்வர் விஜய் பாணியை பின்பற்றும் நடிகர் தனுஷ்.. தொகுதிகள் வாரியாக கட்டமைப்பு.. நற்பணி இயக்கமாக மாறிய ரசிகர் மன்றம்!!

ஸ்டாலின் உட்பட வீழ்த்தப்பட்ட தலைவர்கள்:

கூட்டத்தில் உரையாற்றிய திருமாவளவன், டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரளா முதல்வர் பினராயி விஜயன் மற்றும் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் ஆகியோர் தன்னியல்பாகத் தோற்றவர்கள் அல்ல என்றும், அவர்கள் திட்டமிட்டுக் குறிவைத்து தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் கூறினார். குறிப்பாகத் தமிழகத்தில் கொளத்தூர் தொகுதியில் மட்டும் சுமார் ஒரு லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் எஸ்.ஐ.ஆர் முறையில் நீக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தேர்தலுக்கு முன்பே எச்சரித்த திருமாவளவன்:

கொளத்தூர் தொகுதியில் சதி நடப்பதாகவும், வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல் நடப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பே ஒரு பெண்மணி தொலைபேசி வாயிலாகத் தனக்குத் தகவல் தெரிவித்ததாகத் திருமாவளவன் குறிப்பிட்டார். இந்தத் தகவலை உடனடியாக அப்போதைய அமைச்சர் சேகர் பாபுவிடம் எடுத்துச் சென்று, பின்னர் நேரடியாக மு.க. ஸ்டாலினிடமே நேரில் தெரிவித்து எச்சரித்ததாகவும் அவர் பகிர்ந்துகொண்டார். இருப்பினும், பி.எல்.ஏ நியமிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டு வருவதால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றே அப்போது பதிலளிக்கப்பட்டதாகத் திருமா தெரிவித்தார்.

இதையும் படிக்க: ஆயுத பூஜை தொடர் விடுமுறை எதிரொலி.. தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்த சிறப்பு ரயில் டிக்கெட்டுகள்..

தேர்தல் ஆணைய அதிகாரிகளின் வெளிப்பாடு:

எஸ்.ஐ.ஆர் முறைகேடுகளை அம்பலப்படுத்தியது காங்கிரஸ் கட்சியோ அல்லது இடதுசாரிகளோ அல்ல என்றும், தேர்தல் ஆணையத்தில் உடன்பணியாற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்களே இதனை வெளிக்கொண்டு வந்திருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார். ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இதழ் நடத்திய புலனாய்வு இதழியல் விசாரணையில் உண்மை வெளிவந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளை நீக்குவதன் மூலம் பாஜாக தனது எதிரிகளை வீழ்த்தி வருவதாகக் குற்றம் சாட்டினார்.

Follow Us