Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இளம் பெண்ணிடம் அத்துமீறல்…சிசிடிவியால் சிக்கிய அரசு ஊழியர்…போலீசார் போட்ட காப்பு!

Govt Employee Arrested For Sexually Harassing: சென்னையில் சாலையில் நடந்து சென்ற இளம் பெண்ணிடம் அத்து மீறியதாக தமிழ்நாடு காதி கிராப்ட் நிறுவன ஊழியரை சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் மயிலாப்பூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் .

இளம் பெண்ணிடம் அத்துமீறல்…சிசிடிவியால் சிக்கிய அரசு ஊழியர்…போலீசார் போட்ட காப்பு!
காதி கிராப்ட் நிறுவன ஊழியர் கைது
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 01 Jan 2026 17:08 PM IST

சென்னை சாந்தோம் பகுதியில் இளம்பெண் ஒருவர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த நபர் திடீரென அந்த இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை சற்றும் எதிர்பாராத அந்த பெண் அலரல் சத்தம் போட்டார். இதனால், பைக்கில் வந்த அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். பின்னர் அங்கிருந்து வீடு திரும்பிய அந்த இளம் பெண் தனது பெற்றோரிடம் இந்த சம்பவம் குறித்து தெரிவித்தார். இதன் பின்னர், இது தொடர்பாக ஆன்லைன் வழியாக மயிலாப்பூர் காவல் நிலையத்துக்கு புகார் மனு அனுப்பினார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், சம்பவம் நடைபெற்ற சாந்தோம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

காதி கிராப்ட் நிறுவன ஊழியர்

அதில், பைக்கில் வந்த நபர் மயிலாப்பூரை சேர்ந்த ஆஸ்டின் ( வயது 47) என்பதும், இவர் இவர் தமிழ்நாடு காதி கிராப்ட் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. மேலும், இவர் அந்த இளம் பெண்ணிடம் பாலியல் சேர்ந்தது கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆஸ்டின் மீது மைலாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க: தமிழகத்தில் நாய்க்கடியால் 6.50 லட்சம் பேர் பாதிப்பு.. 33 பேர் உயிரிழப்பு.. ஷாக் தகவல்!!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்

தமிழகத்தில் சமீப காலமாக பெண்கள் மீது பாலியல் ரீதியான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது பள்ளி, கல்லூரிகள் மட்டுமின்றி பொது இடங்களிலும் அதிகரித்து வருகிறது. சிறு குழந்தைகள் முதல் பெண்கள் வரையிலான பாலியல் அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதில் சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலும், இந்த சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக தெரியவில்லை.

தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்

இதனால், பெண் குழந்தைகளின் முதல் பெண்கள் வரை சாலையில் நடந்து செல்வதற்கு அச்சமாக உள்ளது. சில பெண்கள் தைரியமாக காவல் நிலையத்தில் புகார் அளித்து விடுகின்றனர். சிலர் குடும்பத்தின் மரியாதை கெட்டு விடும் என்ற அச்சத்தில் புகார் அளிக்காமல் அந்த சம்பவத்தை கடந்து செல்கின்றனர். எது எப்படியாக இருந்தாலும், தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் படிக்க: கோவையில் இரு வடமாநில தொழிலாளிக்கு கத்திக்குத்து….இரு இளைஞர்கள் வெறிச்செயல்!