AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஜெம் வீரமணி வழக்கு.. தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் – கொதித்த பிரேமலதா விஜய்காந்த்..

Premalatha Vijayakanth On Gem Veeramani Case: இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு நிச்சயமாக தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இது தமிழகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தக்கூடிய ஒரு விஷயம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜெம் வீரமணி வழக்கு.. தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் – கொதித்த பிரேமலதா விஜய்காந்த்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 25 Sep 2026 07:25 AM IST

செப்டம்பர் 25, 2026: ஜெம் வீரமணி வழக்கில் குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், ஜெம் வீரமணி வழக்கைத் தோண்டத் தோண்ட பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி வருவதாகவும், இதைப் பார்க்க மிகவும் அதிர்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஜெம் வீரமணி வழக்கில் தப்பு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும்:

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு நிச்சயமாக தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இது தமிழகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தக்கூடிய ஒரு விஷயம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வரும் நிலையில், தமிழக போலீஸ் அகாடமி இயக்குநராக இருந்து வரும் அருண் ஐபிஎஸ் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையராக இருந்து வரும் கண்ணன் ஐபிஎஸ் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதேபோல், உதவி ஆணையர் யாஸ்மினும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க: கரூர் சம்பவ வழக்கில் தீர்ப்பு வந்தால் “தவெக க்ளோஸ்”.. பிரசாரத்தில் இறங்கி அடித்த எடப்பாடி கே. பழனிசாமி!

வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்:

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் வீரமணி தொடர்பான பாலியல் வழக்கு கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக அடுத்தடுத்த விசாரணைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கு.. “திமுக ஆட்சியில் யாரையும் காப்பாற்ற உத்தரவிடவில்லை!”.. மு.க. ஸ்டாலின் பாய்ச்சல்!!

இதனிடையே, கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த அருண் ஐபிஎஸ் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், ஜெம் வீரமணி தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என காங்கிரஸ் கட்சியின் பட்டியலின அணி தலைவர் ரஞ்சன் குமார் தெரிவித்திருந்தார்.

தீவிரமாகும் விசாரணை:

2024-ஆம் ஆண்டு கூடுதல் ஆணையராக இருந்த கண்ணன் ஐபிஎஸ்ஸிடம் ஜெம் வீரமணி தொடர்பாக புகார் அளித்திருந்ததாகவும், ஆனால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். இதுகுறித்து தமிழக காவல்துறை விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் ரஞ்சன் குமார் வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், காவல்துறை அதிகாரிகள் மீதான அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வழக்கில் இதுவரை வீரமணி, அவரது உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திரன், அவரது மகன் மற்றும் மற்றொரு உதவியாளர் கணேசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Follow Us