வியாபாரியிடம் 12 கிலோ தங்கம் திருட்டு.. மிளகாய் பொடி தூவி கும்பல் அட்டூழியம்.. திருச்சியில் சம்பவம்!

Trichy Crime News : சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் காரில் சென்ற நகை வியாபாரியிடம் 12 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுநீர் கழிக்க நின்ற அவரின் மீது மிளகாய் பொடி தூவி, காரில் இருந்த 12 கிலோ தங்கத்தை 4 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்துள்ளது தெரியவந்துள்ளது.

வியாபாரியிடம் 12 கிலோ தங்கம் திருட்டு.. மிளகாய் பொடி தூவி கும்பல் அட்டூழியம்.. திருச்சியில் சம்பவம்!

மாதிரிப்படம்

Updated On: 

15 Sep 2025 07:15 AM

 IST

திருச்சி, செப்டம்பர் 15 :  சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் நகை வியாபாரியை வழிமறித்து, 12 கிலோ தங்கத்தை கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரில் சென்றுக் கொண்டிருந்த வியாபாரி மீது மிளகாய் பொடி தூவி, அவர் வைத்திருந்த தங்கத்தை திருடிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. சமீப நாட்களாகவே கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. தங்கம் விலை அதிகரிக்க திருட்டு சம்பவங்களுக்கு அதிகரித்து வருகிறது. இதுபோன்ற திருட்டு சம்பவங்களை தடுக்கவும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. திருட்டில் ஈடுபடுபவர்களை பிடித்து ஜெயிலில் அடைத்து வருகின்றனர். இந்த நிலையில் தான் திருச்சி நெடுஞ்சாலையில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது.

திருச்சியில் நகை வியாபாரியிடம் 12 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை சவுகார்போட்டையில் உள்ள ஒரு நகைக் கடையில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் பிரதீப் ஷாட். இவர் 2025 செப்டம்பர் 13ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் ஆபரண நகைகள் விற்பனை செய்துவிட்டு, மீதமுள்ள 12 கிலோ தங்கத்துடுன் சென்னைக்கு காரில் புறப்பட்டு சென்றுக் கொண்டிருந்தார். அந்த காரில் பிரதீப் ஷாட் மற்றும் அவருடன் இரண்டு பேர் இருந்தனர். கார் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தது.

Also Read : வாயில் பேப்பரை திணித்த தாய்.. துடிதுடித்து உயிரிழந்த குழந்தை.. ஷாக் பின்னணி!

வியாபாரியிடம் 12 கிலோ தங்கம் திருட்டு

2025 செப்டம்பர் 13ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் திருச்சி சமயபுரத்தை கடந்து சிறுகனூர் அருகே சென்றுக் கொண்டிருந்தது.  பின்னர், சிறுநீர் கழிப்பதற்காக கார் சமயபுரம் அருகே நின்றுக் கொண்டிருந்தது. இதன்பின்பு, அவர்கள் பின்னால் ஒரு கார் வந்தது. அதில் இருந்து 4 பேர், திடீரென காரில் இருந்து இறங்கி சிறுநீர் கழித்து கொண்டிருந்தவர்கள் மீது மிளகாய் பொடியை தூவினர். இதனால், கடுமையான கண் எரிச்சலால் அவர்கள் அலறினர்.

இதற்கிடையில், காரில் வந்தவர்கள் நகை வியாபாரி வந்த காரின் கண்ணாடியை உடைத்து 2 பைகளில் இருந்த 12 கிலோ தங்கத்தை பறித்து சென்றனர். அவற்றின் மதிப்பு திருடிக் கொண்டு, அந்த கும்பல் காரில் தப்பிச் சென்றது. இதனை அடுத்து, சமயபுரம் காவல் நிலையத்தில் நகை வியாபாரி புகார் கொடுத்தார். இதனை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகிறது.

Also Read : திருப்பூரில் ஷாக்… புகார் கொடுத்தவரை கார் ஏற்றி கொன்ற பேரூராட்சி தலைவர்.. கைது செய்த போலீஸ்!

இந்த கொள்ளை கும்பலை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சந்தேகத்தின் பேரில் பிரதீப் ஷாட் உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இதற்கிடையில், 2 பேரை பிடித்ததாக கூறப்படுகிறது. நாள் முழுவதும் பரபரப்பாகும் இருக்கும் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.