Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வாயில் பேப்பரை திணித்த தாய்.. துடிதுடித்து உயிரிழந்த குழந்தை.. ஷாக் பின்னணி!

Kanyakumari Baby Murder : கன்னியாகுமரியில் பிறந்து 40 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தாய் கொலை செய்துள்ளார். குழந்தையின் வாயில் பேப்பரை திணித்து துடிதுடிக்க கொலை செய்துள்ளார். கணவர் அளித்த புகாரின்பேரில், அந்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

வாயில் பேப்பரை திணித்த தாய்.. துடிதுடித்து உயிரிழந்த குழந்தை.. ஷாக் பின்னணி!
கைதான பெண்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 12 Sep 2025 14:40 PM IST

கன்னியாகுமரி, செப்டம்பர் 12 : கன்னியாகுமரியில் பச்சிளம் குழந்தை தாய் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தையின் வாயில் பேப்பரை திணித்து துடிதுடிக்க குழந்தையை கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். பச்சிளம் குழந்தைள் கொலை செய்யப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக, பச்சிளம் குழந்தைளை அவரது தாய்மார்களே கொலை செய்யப்படுவது அதிர்ச்சிக்குள்ளாகி வருகிறது. சமீப நாட்களில் பெற்ற குழந்தைகளை அவரது தாய் கொலை செய்வது அரங்கேறி வருகிறது. அப்படிதான் இப்போது, குழந்தையை கொலை செய்ததற்காக தாய் கைதாகி உள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள பாலூர் பகுதியைச் சேர்ந்தவர் பெனிட்டா ஜெய அன்னாள் (20). இவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் (21) என்பவரை காதலித்து வந்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள், 2024ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு, இருவரும் கன்னியாகுமரியில் உள்ள பெனிட்டா வீட்டில் வசித்து வந்துள்ளார். மேலும், தனியார் நிறுவனத்தில் இருவரும் வேலை அன்றாட செலவை பார்த்துக் கொண்டு வந்தனர். இதற்கிடையே, பெனிட்டா கர்ப்பமானார். இவருக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், 2025 செப்டம்பர் 9ஆம் தேதி வேலைக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பிய கார்த்திக் குழந்தை அசைவு இல்லாமல் இருந்துள்ளது.

குழந்தையை கொன்ற பெண்

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கார்த்தி, மனைவிடம் கேட்டுள்ளார். அதற்கு, அவர் பால் குடிக்கும் போது, குழந்தை தவறி விழுந்துள்ளது என்று கூறினார். இதனை அடுத்து, கார்த்திக் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

ஆனால், குழந்தையின் மரணத்தில் கார்த்திக் சந்தேகம் அடைந்து, கருங்கல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனையின் முடிவில் குழந்தை கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் தாயை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அவர் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். மேலும், குழந்தை பிறந்து 40 நாட்களே ஆனதாகவும், குழந்தை பிறந்ததில் இருந்தே தன் கணவர் தன் மீது அன்பாக இல்லை என்றும் வாக்குமூலம் அளித்தார். மேலும், குழந்தையால் தான் தன் மீது அன்பு குறைந்துள்ளது என்றும் இதனால் குழந்தையின் வாயில் பேப்பரை திணித்து கொன்றேன் என பெண் பெனிட்டா ஜெய அன்னாள் வாக்குமூலம் அளித்தார்.  பச்சிளம் குழந்தை கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர்.