Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Sengottaiyan : கடந்த அக்டோபர் 31, 2025 அன்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை நிகழ்வில் அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் ஒன்றாக கலந்துகொண்டார். இந்த நிலையில் செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கி எட்ப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
செங்கோட்டையன் - எடப்பாடி பழனிசாமி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 31 Oct 2025 20:13 PM IST

சென்னை, அக்டோபர் 31 : அதிமுகவில் தொடர்ச்சியான அரசியல் பரபரப்புகளுக்கு இடையே, முன்னாள் அமைச்சர் மற்றும் கோபிச்செட்டிபாளையம் தொகுதி எம்எல்ஏவுமான கே.ஏ. செங்கோட்டையன்  (Sengottaiyan), கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.  இந்த அதிரடி முடிவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K Palaniswami) அக்டோபர் 31 2025 அன்று அறிவித்துள்ளார்.  கடந்த அக்டோபர் 30, 2025 அன்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை நிகழ்ச்சியின் போது ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோருடன் செங்கோட்டையன் ஒன்றாக கலந்துகொண்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதன் பின்னணி குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் அதிரடி நீக்கம்

கடந்த அக்டோபர் 30, 2025 அன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்ற குருபூஜை நிகழ்வில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கோபிசெட்டிபாளையம் தொகுதி எம்எல்ஏ செங்கோட்டையன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒரே காரில் வந்து ஒன்றாக கலந்துகொண்டனர். மேலும் மூவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து தங்களது விமர்சனங்களை முன் வைத்தனர். இந்த நிலையில் இதனையடுத்து செங்கோட்டையன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க : இரவோடு இரவாக தவெக தலைமை அலுவலகத்திற்கு ஓடோடி வந்த புஸ்ஸி ஆனந்த்.. இதுதான் காரணம்!!

செங்கோட்டையன் நீக்கப்பட்டது குறித்து அதிமுக பதிவு

 

இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அதிமுகவின் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும் கழகத்தில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும், அவர்களுடன் ஒன்றிணைந்து, கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

இதையும் படிக்க : செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கம்? அதிரடி முடிவெடுக்கும் இபிஎஸ்!!

இந்த காரணத்தினால், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த, கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான  கே.ஏ.செங்கோட்டையன், அக்டோபர் 31, 2025 முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பம் வைகொள்ளர்என கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் அரசியல் அரங்கில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் செங்கோட்டையனின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.