AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கொளத்தூர் தொகுதி பொறுப்பாளர்.. இதை தான் பார்த்துக்கொள்கிறேன் என்றீர்களா? சேகர்பாபு மீது கடுமையான நடவடிக்கை தேவை – முன்னாள் எம்.எல்.ஏ பரந்தாமன்..

முக்கியமாக, தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த மு.க. ஸ்டாலின் தனது சொந்த தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். இது திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது தோல்வி, கட்சி தொண்டர்களுக்கு மட்டுமின்றி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

கொளத்தூர் தொகுதி பொறுப்பாளர்.. இதை தான் பார்த்துக்கொள்கிறேன் என்றீர்களா? சேகர்பாபு மீது கடுமையான நடவடிக்கை தேவை – முன்னாள் எம்.எல்.ஏ பரந்தாமன்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 05 May 2026 15:52 PM IST

சென்னை, மே 5, 2026: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், தமிழக வெற்றி கழகம் தனிப் பெரும்பான்மையுடன் 108 இடங்களைப் பெற்று முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் 73 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் அதிமுக உள்ளது. இந்த தேர்தலில் திமுக எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. குறிப்பாக, திமுக அமைச்சர்களாக இருந்த பலருக்கும் இந்த தேர்தல் கடுமையான சவாலாக அமைந்தது. அவர்களில் பலர் தோல்வியடைந்துள்ளனர்.

கொளத்தூரில் தோல்வியை தழுவிய மு.க ஸ்டாலின்:

முக்கியமாக, தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த மு.க. ஸ்டாலின் தனது சொந்த தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். இது திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது தோல்வி, கட்சி தொண்டர்களுக்கு மட்டுமின்றி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

மேலும் படிக்க: தவெக தலைவர் விஜய் பதவியேற்பு விழா? வெளியானது முக்கிய அறிவிப்பு?

சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் 14 தொகுதிகளில் திமுக தோல்வியடைந்துள்ளது. திமுகவின் கோட்டையாக விளங்கிய சென்னை தற்போது தமிழக வெற்றி கழகத்தின் கைக்கு சென்றுள்ளது.

கொளத்தூர் தொகுதி பொறுப்பாளர் மீது நடவடிக்கை வேண்டும்:

இந்த சூழலில், கொளத்தூர் தொகுதிக்கு பொறுப்பாக இருந்த சேகர் பாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சியினரிடையே கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், “அரசியலில் வெற்றி, தோல்வி இயல்பானவை. ஆனால் தலைவரின் தொகுதியை கவனிக்கத் தவறியவர் மீது தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்றது இதற்காகத்தானா?” என கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க: வறுத்தம் தெரிவித்து குறுஞ்செய்தி அனுப்புகிறீர்கள்.. நீங்கள் இருக்க கவலை என்ன? மு.க ஸ்டாலின் உருக்கமான பதிவு..

மேலும், பல கட்சி நிர்வாகிகளும் கொளத்தூர் தொகுதியை கவனிக்கத் தவறிய சேகர் பாபு மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Follow Us