AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சோஷியல் மீடியாவில் ட்ரோல் செய்யப்படும் மேயர் பிரியா..பர்கர் சாப்பிட்டாலும் பிரச்சனை; முடியை வெட்டினாலும் பிரச்சனை – வேதனை பதிவு..

Mayor Priya Post: பொது வாழ்வில் இருக்கும் பெண் என்பதற்காக, அவரது தோற்றம், வாழ்க்கை முறை அல்லது தனிப்பட்ட விருப்பங்களை வைத்து அவரை மதிப்பிடுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. ஒவ்வொரு பெண்ணுக்கும் தனிப்பட்ட கண்ணியம், சுயமரியாதை மற்றும் தனக்கான வாழ்க்கையை தனது விருப்பப்படி வாழும் உரிமை உள்ளது.

சோஷியல் மீடியாவில் ட்ரோல் செய்யப்படும் மேயர் பிரியா..பர்கர் சாப்பிட்டாலும் பிரச்சனை; முடியை வெட்டினாலும் பிரச்சனை – வேதனை பதிவு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 26 Sep 2026 11:45 AM IST

செப்டம்பர் 26, 2026: சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தனது தோற்றம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை முறை குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது தொடர்பாக வேதனை தெரிவித்துள்ளார். பொது வாழ்வில் இருக்கும் பெண்ணை அவரது தோற்றம், வாழ்க்கை முறை அல்லது தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் மதிப்பிடக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த மேயர் பிரியா, புதிய தோற்றத்தில் முடியை வெட்டி, ‘பாப்’ கட்டுடன் காணப்பட்டார். இதுதொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட நிலையில், சிலர் அவரை கிண்டல் செய்யும் வகையில் கருத்துகளை பதிவிட்டிருந்தனர்.

மேலும் படிக்க: கிண்டி ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. புறநகர் ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க மக்களே..

நான் என்ன செய்தாலும் சர்ச்சையாகி விடுகிறது – மேயர் பிரியா:


இந்த நிலையில், மேயர் பிரியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “ஏன் எப்போதும் என்னைச் சுற்றியே இது நடக்கிறது? நான் என்ன செய்தாலும் அது சர்ச்சையாகி விடுகிறது. பதவியேற்ற முதல் நாளிலிருந்து இன்று வரை, மிகவும் சாதாரணமான விஷயங்கள்கூட பிரச்சனையாக மாற்றப்படுகின்றன.

நான் பர்கர் சாப்பிட்டாலும் பிரச்சனை. நான் முடியை வெட்டினாலும் பிரச்சனை. நான் எடுக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட முடிவும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு, விமர்சிக்கப்படுகிறது. சில நேரங்களில் நான் யோசிப்பதுண்டு; இதற்கு காரணம் நான் பெண் என்பதா? அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க: இந்திய அளவில் முதலிடத்தில் தமிழ்நாடு.. ஆட்சிக்கு வந்த 4 மாதத்தில் சாதித்து காட்டிய முதல்வர் விஜய்!!

தோற்றம், வாழ்க்கை முறை வைத்து மதிப்பிட யாருக்கும் உரிமை இல்லை:

மேலும், “என்னைப் பொறுத்தவரை பெண்ணுரிமைக்காகவும், பெண்களுக்காகவும் குரல் கொடுப்பதாகக் கூறுபவர்கள் எங்கே செல்கிறார்கள் என்பது தெரியவில்லை. அரசியலில் இருக்கும் பெண்கள் குணமற்றவர்களோ அல்லது மரியாதைக்கு குறைவானவர்களோ அல்ல.

பொது வாழ்வில் இருக்கும் பெண் என்பதற்காக, அவரது தோற்றம், வாழ்க்கை முறை அல்லது தனிப்பட்ட விருப்பங்களை வைத்து அவரை மதிப்பிடுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. ஒவ்வொரு பெண்ணுக்கும் தனிப்பட்ட கண்ணியம், சுயமரியாதை மற்றும் தனக்கான வாழ்க்கையை தனது விருப்பப்படி வாழும் உரிமை உள்ளது. மேயர் என்ற பதவிக்கு அப்பாற்பட்டு, முதலில் ஒரு பெண்ணாக என்னை மதிக்க வேண்டும்” என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

Follow Us