Oraniyil Tamil Nadu: திமுக உறுப்பினர் சேர்க்கை.. ஓரணியில் தமிழ்நாடு மூலம் OTP பெற உயர்நீதிமன்றம் தடை..!
DMK Oraniyil Tamil Nadu: திராவிட முன்னேற்ற கழகத்தின் 'ஓரணியில் தமிழ்நாடு' திட்டத்தின் கீழ் உறுப்பினர் சேர்க்கைக்காக ஆதார், வாக்காளர் அட்டை, வங்கி விவரங்கள் சேகரித்ததற்கு மதுரை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி தகவல்களை சேகரிப்பதாகவும், தரவு பாதுகாப்பு குறித்து தெளிவான விளக்கம் இல்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மதுரை, ஜூலை 22: திராவிட முன்னேற்ற கழகத்தின் (Dravida Munnetra Kazhagam) ‘ஓரணியில் தமிழ்நாடு’ (Oraniyil Tamil Nadu) என்ற திட்டத்தின் கீழ் உறுப்பினர் சேர்க்கைக்காக ஆதார் எண், வாக்காளர் அட்டை, வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை பெற்று திமுகவினர் அவர்களது செல்போன்களை ஒடிபி கேட்பது பல சர்ச்சைகளை கிளப்பியது. இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் (Madurai Bench High Court) வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மதுரைக்கிளை, இப்படியான தகவல்களை பெறுவதற்கு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தற்போது, இதுதொடர்பாக திமுக சார்பில் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக, திமுக சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் எம்.பி.வில்சன், “திமுகவினர் உறுப்பினர் சேர்க்கைக்கு மட்டுமே ஓரணியில் தமிழ்நாடு மூலம் ஒடிபி பெற்றனர். இதற்காக, வேறு இந்த ஆவணங்களையும் பெறவில்லை. ஆனால், அதிமுகவினர் தவறான தகவல்களை கூறி, தடை உத்தரவை பெற்றுள்ளனர்.” என குறிப்பிட்டார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கே.ஆர்.பாரதி கண்ணன் ஆஜரானார். அப்போது அவர், “திமுகவினர் ஒவ்வொரு வீடு வீடாக சென்று ஆதார் உள்ளிட்ட விவரங்களை கேட்டு, நலத்திட்ட உதவிகளை நிறுத்திவிடுவோம் என்று மிரட்டுகின்றனர். இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி தகவல்களை கொடுக்கிறார்கள்.” என்று தெரிவித்தார்.




ALSO READ: ஆடி அமாவாசை.. ராமேஸ்வரம் போறீங்களா? போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு!
தற்காலிக தடை:
ஓரணியில் திரள்வோம் தமிழ்நாடே!#ஓரணியில்_தமிழ்நாடு | #OraniyilTamilNadu | #trichy_south_dmk |#DMKfor2026 | #DMK4TN | #MKStalinEra | #AnbilMaheshForever | @Anbil_Mahesh | @arivalayam pic.twitter.com/CwJfEfm64u
— Anbil Mahesh Forever (@AnbilMahesh4evr) July 14, 2025
இருதரப்பு வாதங்களை கேட்ட மதுரைக்கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மடிய கிளாட் மற்றும் எஸ்.எம்.சுப்பிரமணியம் தங்கள் உத்தரவுகளை பிறப்பித்தனர். இதில், நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் வெளியிட்ட உத்தரவில், “தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பு குறித்தும், தரவு பாதுகாப்பு குறித்து எந்த தெளிவான விளக்கமும் திமுக தரப்பில் தரப்படவில்லை. பொதுமக்களிடம் இப்படியான தரவுகளை பெறுவது என்பது ஆபத்தானது. எனவே, இதன் அடிப்படையில் ஒடிபி பெறுவதற்கு தற்காலிய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த விவகாரம் குறித்து பதில் மனி தாக்கல் செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.
தொடர்ந்து நீதிபதி மரிய கிளாட், “ஒடிபி விவகாரத்தில் சக நீதிபதியின் கருத்துக்கு உடன்படுகிறேன். ஆனால், இதனால் சிறிய கட்சிகள் பாதிக்கப்படுகிறதா என்பது குறித்து, பதில் மனு தாக்கல் செய்யப்பட்ட பிறகுதான் நடக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
ALSO READ: பேருந்து கட்டணம் உயர்கிறதா? போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
இதை தொடர்ந்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “சீப்பை ஒளித்து வைத்துவிட்டு திருமணத்தை நிறுத்தி விட்டோம் என்ற வகையில் ஒடிபி பெறுவதை நிறுத்திவிட்டோ என அதிமுக, பாஜக கூப்பாடு போவது வேடிக்கையாக உள்ளது” என்று தெரிவித்தார்.