AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Dharapuram Bypoll 2026: தாராபுரம் அதிமுகவின் கோட்டை.. வெற்றி நிச்சயம் – வாக்களித்த பின் பேட்டியளித்த அதிமுக வேட்பாளர் பானுமதி..

Tamil Nadu Bypolls 2026: அதிமுக வேட்பாளர் பானுமதி தனது வாக்கினைச் செலுத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், வாக்குப்பதிவு தொடங்கியது முதலே மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருவதாகவும், தேர்தல் பணிகளை தங்கள் தரப்பில் சிறப்பாக மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Dharapuram Bypoll 2026: தாராபுரம் அதிமுகவின் கோட்டை.. வெற்றி நிச்சயம் – வாக்களித்த பின் பேட்டியளித்த அதிமுக வேட்பாளர் பானுமதி..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 06 Oct 2026 09:52 AM IST

அக்டோபர் 6, 2026: தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இரு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம், அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி என ஐந்து முனைப் போட்டி நிலவி வருகிறது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் பானுமதி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சத்யபாமா, திமுக சார்பில் சுகன்யா, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். சுயேட்சை வேட்பாளர்களுடன் சேர்த்து மொத்தம் 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தாராபுரம் அதிமுகவின் கோட்டை – பானுமதி:


இந்நிலையில், அதிமுக வேட்பாளர் பானுமதி தனது வாக்கினைச் செலுத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், வாக்குப்பதிவு தொடங்கியது முதலே மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருவதாகவும், தேர்தல் பணிகளை தங்கள் தரப்பில் சிறப்பாக மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், தாராபுரம் அதிமுக வென்ற தொகுதி என்றும், எப்போதுமே இந்த தொகுதி அதிமுகவின் கோட்டையாக இருந்து வருவதாகவும் கூறிய பானுமதி, இந்த தேர்தலில் மக்களின் தீர்ப்பு அதிமுகவிற்கு சாதகமாக இருக்கும் என்றும், அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் படிக்க:  2 தொகுதிகள் இடைத்தேர்தல்.. வாக்களிக்க மக்கள் ஆர்வம்

மக்களின் ஆதரவு யாருக்கு?

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சத்யபாமா தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார். ஆனால், வெற்றி பெற்ற சில நாட்களிலேயே தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து தாராபுரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

தேர்தல் பிரசாரத்தின்போது தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்யபாமாவுக்கு தொகுதியில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவு எந்த கட்சிக்கு சாதகமாக அமையும் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us