சிக்கன் ரைஸ் கேட்டு தகராறு.. சாலையோர உணவகத்தை சூறையாடிய கும்பல்.. அதிர்ச்சி சம்பவம்!
Tuticorin Hotel Vandalized Over Chicken Rice | தூத்துக்குடியில் சாலையோர கடையில் உணவு சாப்பிட சென்ற இளைஞர்கள் உணவு வழங்க தாமதமானதால், அந்த கடையை சூறையாடியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், 10 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி, அக்டோபர் 06 : தூத்துக்குடியில் (Tuticorin) சிக்கன் ரைஸ் கேட்டு தகராறில் ஈடுபட்ட கும்பல், ஒரு ஓட்டலையே சூறையாடிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் முன்னிலையிலே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக 10 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சிக்கன் ரைசால் வெடித்த கலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஓட்டலில் சாப்பிட வந்த கும்பல்
விருதுநகர் மாவட்டம், கம்மாபட்டியை சேர்ந்த இளைஞர்கள் 12 பேர் அக்டோபர் 03, 2026 அன்று வேனில் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் அக்டோபர் 04, 2026 அன்று திருச்செந்தூரில் இருந்து மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு அதே வேனில் திரும்பியுள்ளனர். அவர்கள் எட்டயபுரம் அருகே சென்றபோது, அங்கிருந்த சாலையோர உணவகத்தில் இரவு உணவு சாப்பிடுவதற்காக நிறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க : மதுராந்தகம்- தாராபுரத்தில் விதிமீறல்.. வேட்பாளர்கள் செயலால் அதிருப்தி.. தேர்தல் ஆணைய புகாரால் சிக்கலில் தவெக?
உணவு வழங்க தாமதமானதால் வெடித்த மோதல்
கடைக்கு வந்த கும்பல் பரோட்டா, சிக்கன் ரைஸ் ஆகியவற்றை ஆர்டர் செய்துள்ளது. அதுமட்டுமன்றி, அந்த இளைஞர்கள் உணவை உடனே வழங்க வேண்டும் என கூறியுள்ளனர். கடையில் ஆட்கள் குறைவாக உள்ளதால் நேரம் எடுக்கும் என்றும் வேண்டுமென்றால் அருகில் பெரிய உணவகம் ஒன்று உள்ளது அங்கே செல்லுங்கள் என கடைக்காரர் கூறியுள்ளார். இதனால், அந்த இளைஞர்கள் கடையை விட்டு வெளியே சென்றுள்ளனர்.
இதையும் படிங்க : திருமண பெண்களுக்கு குட் நியூஸ்.. அண்ணன் சீர் திட்டம்.. அமைச்சர் ஜெகதீஸ்வரி கொடுத்த அப்டேட்!
கைகலப்பாக மாறிய விவகாரம்
இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. இந்த நிலையில், அந்த ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டு இருந்த போலீஸ் ஒருவர் இரண்டு தரப்பையும் சமாதானம் செய்துள்ளார். அதுமட்டுமன்றி, இந்த விவகாரம் குறித்து அவர் எட்டயபுரம் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், வாக்குவாதம் முற்றிய நிலையில், இரு தரப்பினரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் தான் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தகராறில் ஈடுபட்ட 10 இளைஞர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.