AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இந்தியாவில் முதல் முறையாக கடல்சார் காற்றாலை.. ரூ.77 கோடிக்கு டெண்டர் வெளியீடு!

India's First Offshore Wind Project Tendered | இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் கடல்சார் காற்றாலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த முன்மாதிரி திட்டத்துக்கு சுமார் ரூ.77 கோடிக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த அசத்தல் திட்டத்தின் சிறப்புகள் குறித்து பார்க்கலாம்.

இந்தியாவில் முதல் முறையாக கடல்சார் காற்றாலை.. ரூ.77 கோடிக்கு டெண்டர் வெளியீடு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 06 Oct 2026 09:02 AM IST

சென்னை, அக்டோபர் 06 : நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தின் (Tamil Nadu) தென் மாவட்டமான தூத்துக்குடியில் (Tuticorin) கடல்சார் காற்றாலை திட்டத்தை தொடங்க சுமார் ரூ.77 கோடிக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளதாக எரிசக்தி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை நிலம்சார் காற்றாலைகள் மட்டுமே உள்ள நிலையில், தற்போது முதல் முறையாக இந்த கடல்சார் காற்றாலை திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டம் குறித்தும் அதன் சிறப்பு அம்சங்கள் குறித்தும் விரிவாக பார்க்கலாம்.

காற்றாலை மின்சார உற்பத்தில் தமிழ்நாடு முன்னிலை

இந்தியாவின் மிகப்பெரிய காற்றாலை மின்சார உற்பத்தி மையங்களில் ஒன்றாக தமிழ்நாடு கடந்த பல ஆண்டுகளாக திகழ்ந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை நிறுவப்பட்டுள்ள காற்றாலைகளின் திறன் 57 ஆயிரத்து 443 மெகா வாட்டாக உள்ளது. இதில் சுமார் 10,734 மெகா வாட்டிற்கும் அதிகமான திறனுடன் தமிழ்நாடு முன்னனி மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

இதையும் படிங்க : சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் குண்டுக்கட்டாகக் கைது.. காவல்துறையுடன் கடும் தள்ளுமுள்ளு!

இந்தியாவின் முதல் கடல்சார் காற்றாலை திட்டம்

காற்றாலை திட்டத்தை கடலுக்கு கொண்டுச் செல்ல தமிழ்நாடு தயாராகி வருகிறது. அதாவது, இந்தியாவின் முதல் கடல்சார் காற்றாலை முன்மாதிரி திட்டம் தூத்துக்குடி கடற்கரை பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக உள்துறைமுகத்தின் தெற்கு அலை தடுப்புச் சுவரில் இருந்து சுமார் 1,650 கிலோ மீட்டர் தூரத்தில் 6.25 மேகாவாட் திறன் கொண்ட ஒரு காற்றாலை நிறுவப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Follow Us