Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சாதிவாரி கணக்கெடுப்பு கோரி ஆர்ப்பாட்டம்…திமுகவை தவிற பிற கட்சிகளுக்கு அழைப்பு…அன்புமணி!

Demanding Caste Census: தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி சென்னையில் மாபெரும் போராட்டம் நடைபெற உள்ளதாகவும், இந்த போராட்டத்துக்கு திமுவை தவிற பிற கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாகவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .

சாதிவாரி கணக்கெடுப்பு கோரி ஆர்ப்பாட்டம்…திமுகவை தவிற பிற கட்சிகளுக்கு அழைப்பு…அன்புமணி!
சாதிவாரி கணக்கெடுப்பு கோரி ஆர்ப்பாட்டம்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 08 Dec 2025 11:45 AM IST

இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி சென்னையில் எனது தலைமையில் டிசம்பர் 17ஆம் தேதி மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, திமுகவை தவிர அனைத்து கட்சிகளையும் அழைத்துள்ளோம். கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா, தெலுங்கானா, பீகார் ஆகிய மாநிலங்களில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியதும், பூரண மது விலக்கை அமல்படுத்தியதன் காரணமாகவே மீண்டும் நிதிஷ்குமார் வெற்றி பெற்று முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

சமூக நீதியை குழி தோண்டி புதைத்த ஸ்டாலின்

பெரியாரின் வழியில் வந்ததாக சமூக நீதி பேசும் ஸ்டாலின் சமூக நீதியை குழி தோண்டி புதைத்து விட்டார். அதிகாரம், அதிகாரிகள், நிதி ஆகியவை இருந்தும் முதல்வர் மு க ஸ்டாலினுக்கு மனது இல்லாமல் போய்விட்டது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தமிழகம் மிக வேகமாக வளரும். தமிழகத்தில் உள்ள 2 கோடி குடும்பங்கள், 8 கோடி மக்களின் நிலையை கண்டறிந்து இட ஒதுக்கீடு மட்டுமின்றி, சமூக நலத்திட்டங்களையும் வழங்க வேண்டும்.

மேலும் படிக்க: அண்ணாமலை-ஓபிஎஸ் திடீர் சந்திப்பு…அரசியல் முக்கியத்துவமாகிறது!

நகராட்சி துறையில் ரூ.888 கோடிக்கு ஊழல்

தமிழகத்தில் நகராட்சி துறையில் ரூ.888 கோடிக்கு ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறை 232 பக்க அறிக்கையை தமிழக காவல்துறைக்கு அனுப்பி விசாரிக்குமாறு கூறியுள்ளது. அதில், அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு ஆட்கள் தேர்வு செய்த நேரத்தில் ஒரு பணிக்கு ரூ.25 முதல் 35 லட்சம் என 2,500 பணிகளுக்கு ரூ.888 கோடி வசூலிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஹவாலா மூலம் சென்றதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. தற்போது வரை அந்த அறிக்கையில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மதுவிலக்கு குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை

ஆனால், இந்த அறிக்கை விவகாரம் எப்படி வெளியே கசிந்தது என்பதற்காக சிபிசிஐடி விசாரணையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. விரைவில் மெகா கூட்டணி அமைக்கப்படும். இந்த கூட்டணி அமோக வெற்றி பெறும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தாக மதுவிலக்கு இருக்கும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலினும், கனிமொழி எம். பி.யும் தெரிவித்திருந்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டு காலம் ஆன நிலையில் அதை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. திமுக அரசு அளித்த 505 வாக்குறுதிகளில் 66 வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளது. தமிழகத்தில் 11 லட்சத்து 32 ஆயிரம் கோடி வருமானம் வந்ததாகவும், 34,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்ததாகவும் பொய்யான தகவலை திமுக அரசு வெளியிட்டுள்ளது என்று தெரவித்தார்.

மேலும் படிக்க: புதுச்சேரி பொதுக்கூட்டம்: “தமிழ்நாட்டினர் வர வேண்டாம்”.. விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!