Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழ்நாட்டினருக்கு அனுமதி இல்லை… தவெக பொதுக்கூட்டம் – புதுச்சேரி காவல்துறை விதித்த கட்டுப்பாடுகள்

TVK Vijay : புதுச்சேரியில் வருகிற டிசம்பர் 9, 2025 அன்று தவெக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. விஜய் கலந்துகொள்ளவிருக்கிற இந்த பொதுக்கூட்டத்திற்கு தமிழ்நாட்டினர் கலந்துகொள்ளக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டினருக்கு அனுமதி இல்லை… தவெக பொதுக்கூட்டம் – புதுச்சேரி காவல்துறை விதித்த கட்டுப்பாடுகள்
விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 07 Dec 2025 21:43 PM IST

புதுச்சேரி, டிசம்பர் 7 : தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) சார்பில் வருகிற டிசம்பர் 9, 2025 அன்று பொதுக்கூட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரோடு ஷோவிற்கு அனுமதி கேட்ட நிலையில், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த பொதுக்கூட்டம் புதுச்சேரி உப்பலம் ஹெலிபேடு மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்து. இந்த கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் (Vijay) கலந்துகொண்டு உரையாற்ற விருக்கிறார். இது அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த பொதுக்கூட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு

புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் டிசம்பர் 9, 2025 செவ்வாய்கிழமை தவெக சார்பில்  பொதுக்கூட்டம் நடத்த காவல்துறை சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.  முதலில் ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டிருந்த நிலையில், புதுச்சேரி காவல்துறை அதற்கு அனுமதி மறுத்தது. தவெக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், புதுச்சேரி முதல்வரை தனிப்பட்ட முறையில் சந்தித்து அனுமதி கேட்டும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்க : “எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் தரப்பால் வெல்ல முடியாது”.. அன்புமணி தரப்பு பளார்!!

மேலும் ரோடு ஷோக்கு பதிலாக பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பொதுக்கூட்டம் நடத்த தவெக சார்பில் அனுமதி கேட்கப்பட்ட நிலையில், தற்போது சில நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து பொதுக்கூட்டத்துக்கான முன்னேற்பாடுகளை தவெகவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறை விதித்த கட்டுப்பாடுகள்

இந்த பொதுக்கூட்டத்திற்கு தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை புதுச்சேரி காவல்துறை விதித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிக்க : ”தமிழகத்தின் fake id அதிமுக.. அதன் அட்மின் அமித்ஷா” – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்..

  • புதுச்சேரியை சேர்ந்த 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • மேலும் அனுமதி பெறுபவர்களுக்கு தனிப்பட்ட முறையில் கியூஆர் கோடுகளுடன் கூடிய பாஸ் வழங்க வேண்டும். பாஸ் வைத்திருப்பவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
  • தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது.
  • மேலும், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு அனுமதி வழங்க கூடாது.
  • பொதுமக்களின் வசதிக்காக போதுமான குடிநீர், கழிவறை உள்ள அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும்.
  • பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவக் குழுவினர், ஆம்புலன் மற்றும் தீயணைப்புத் துறை வாகனங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
  • பொதுக்கூட்டத்துக்கு வரும் தொண்டர்களை பிரிவுகளாக பிரித்து உரிய தடுப்புகள் அமைக்க வேண்டும்.
  • மேடை அமைத்து நாற்காலிகள் போடக் கூடாது.

மேற்சொன்ன நடவடிக்கைகள் உரிய முறையில் கடைபிடிக்க வேண்டும் என புதுச்சேரி காவல்துறை உத்தரவிட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிறகு அரசியல் கூட்டங்களுக்கான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி அரசு முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.