2026 தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவும்.. சொல்கிறார் டிடிவி தினகரன்!!
அமமுக பொதுச்செயாலளர் டிடிவி தினகரன், தனது கட்சி வேட்பாளர்களை அறிவிப்பதற்காகன தொடக்க பணிகளைத் தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார். இதற்கான விருப்ப மனுக்களை வரும் டிச.10ம் தேதி முதல் பெற உள்ளதாகவும், விண்ணப்பங்கள் ஜனவரி 3ம் தேதி வரை பரிசீனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர், டிசம்பர் 07: 2026 சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமெடுக்க தொடங்கியுள்ளன. அந்தவகையில், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் இம்முறை அதிகளவிளான தொகுதிகளை கேட்டு பெற திட்டமிட்டு வருகின்றன. இதற்காக முதல் ஆளாக, காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த ஐவர் குழுவை நியமித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில், அக்கட்சியில் தேர்தல் வியூக வகுப்பாளர் பரவீன் சக்கரவர்த்தி அண்மையில் தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் இம்முறை திமுக கூட்டணியில் நீடிக்குமா அல்லது தவெகவுடன் கூட்டணி அமைக்குமா என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கெனவே, தவெகவில் மூத்த அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவராக இணைந்து வருகின்றனர். வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதவும், அதிமுவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளதால், அவரது உதவியுடன் இன்னும் பல அதிமுக முக்கிப்புள்ளிகள் அக்கட்சியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் முதல் முறையாக தேர்தலில் போட்டியிடும் தவெக, பழம்பெரும் கட்சிகளான திமுகவுக்கும், அதிமுகவுக்கும் கடும் போட்டி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : “அமித்ஷா அழைத்தாலும் செல்ல மாட்டேன்”.. டிடிவி தினகரன் திட்டவட்டம்!!




அதிமுக ஒருங்கிணைந்தால் தான் பலம்:
இந்நிலையில், தவெகவுடன் டிடிவி தினகரனின் அமமுக கூட்டணி அமைக்கும் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. டிடிவி தினகரனின் அண்மைக்கால பேச்சுகளும் இதனை உறுதிப்படுத்தும் வகையிலே இருந்து வருகிறது. அதன்படி, திருப்பூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, அதிமுக ஒன்றாக இருந்தால் தான் அடுத்த நூற்றாண்டுக்கும் எடுத்து செல்ல முடியும் என்றும் சட்டமன்ற தேர்தல் முடிவிற்கு பிறகு தூங்கிக்கொண்டு இருப்பவர்கள், தூங்குவது போல் நடிப்பவர்கள் ஒருங்கிணைவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
நான்கு முனை போட்டி தான் நிலவும்:
மேலும் பேசிய அவர், தமிழகத்தில் இந்த தேர்தலில் நான்கு முனை போட்டி தான் இருக்கும் என்றும், நான் சொன்னதை புரிந்து கொள்ளாமல் தினகரன் 5வது அணி அமைப்பார் என பேசினார்கள். ஆனால் அது உண்மை இல்லை. தமிழகத்தில் நான்கு முனை போட்டிதான் நிலவும் என்றும் தங்கள் கூட்டணி வெற்றியை நோக்கி அணிவகுக்கும் எனவும் அவர் சூளுரைத்தார்.
இதையும் படிக்க : அதிமுகவில் இருந்து தவெகவுக்கு தாவும் 6 முக்கிய புள்ளிகள்…யார் அவர்கள்!
அதோடு, கூட்டணிக்கு தலைமை ஏற்று இருக்கும் சில கட்சிகள் தங்களோடு பேசி வருவதாகவும், இறுதி வடிவம் அடைந்த பிறகு உறுதியாக தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். கூட்டணி அமைப்பதற்கு தங்களுக்கு எந்த நிபந்தனையும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.