தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த பயணி..உடைமையில் அரிய வகை உயிரினங்கள்..பரபரப்பான விமான நிலையம்!

Chennai Airport Animals Seized: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை உயிரினங்களை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் உரிய ஆவணங்கள் இன்றி கடத்தி வந்தது தெரிய வந்தது.

தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த பயணி..உடைமையில் அரிய வகை உயிரினங்கள்..பரபரப்பான விமான நிலையம்!

சென்னை விமான நிலையத்தில் அரிய வகை உயிரினங்கள் பறிமுதல்

Published: 

13 Feb 2026 07:42 AM

 IST

சென்னை மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தில் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் உள் நாடுகள் மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால், 24 மணி நேரமும் சென்னை விமான நிலையம் பரபரப்பாக காணப்படும். இதில், வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் பயணிகள் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் மற்றும் அரிய வகை உயிரினங்கள், போதை பொருட்கள் ஆகியவற்றை அவ்வப்போது கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு பயணிகள் விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் பயணித்தவர்கள் மற்றும் அவர்களது உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

31 அரிய வகை உயிரினங்கள்

அப்போது, சந்தேகம் அளிக்கும் வகையில் நடந்து கொண்ட ஒரு ஆண் பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அவரது உடைமைகளை சோதனை செய்ததில், அதில், சகாரா பாலைவனம் மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்படும் 9 ஆமைகள், அரிய வகை பள்ளிகள், 4 வாட்டர் டிராகன் எனப்படும் பல்லிகள், 1 ராயல் பைத்தான் பாம்புகள், 12 அரிய வகை உடும்பு, 3 வெள்ளை நிற நாகப் பாம்பு என 31 வகையிலான அரிய வகை உயிரினங்கள் இருந்தன. இவற்றை அந்த நபர் எலக்ட்ரானிஸ் சாதனங்களுக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்திருந்தார்.

மேலும் படிக்க: ரயில் பயணிகளின் கனிவான கவனத்துக்கு…அம்ரித் பாரத் ரயில்களில் புதிய வசதி…ரயில்வேயின் அசத்தல் அறிவிப்பு!

வன உயிரினங்கள் கடத்தும் கும்பலுடன் தொடர்பு

இதைத் தொடர்ந்து அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் சென்னையை சேர்ந்தவர் என்பதும், சுற்றுலா விசா மூலம் தாய்லாந்து நாட்டுக்கு சென்ற அவர், அங்கு வன உயிரினங்களை கடத்தும் கும்பலுடன் தொடர்பில் இருப்பதும், அதன்படி, முதல் முறையாக வன உயிரினங்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. தமிழகத்தில் இந்த உயிரினங்களை வாஸ்து மற்றும் அதிர்ஷ்டம் எனக் கூறி விற்பனை செய்தால் அதிகளவு பணம் கிடைக்கும் என்று நண்பர்கள் கூறியதாகவும், அதன்படியே, இந்த உயிரினங்களை கடத்தி வந்ததாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்து விமானத்தில் திருப்பி அனுப்பி வைப்பு

மேலும், இந்த உயிரினங்கள் அனைத்தும் மிகவும் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களின் பட்டியலில் வருவது தெரிய வந்தது. இந்த உயிரினங்களை வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு அரசிடமிருந்து முறையான உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், இதனை கொண்டு வந்த நபர் முறையான உரிமம் இல்லாமல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, அந்த உயிரினங்கள் அனைத்தும் பாதுகாப்பு கருவி தாய்லாந்தில் இருந்து வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், இவருடன் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க: 70-80 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றால் இசை எழுப்பும் சாலை.. மும்பையில் முதல் முறையாக Melody Road!

Related Stories
வீடுகளில் நாய் வளர்க்கிறீர்களா…ரூ.5000 அபராதம்…சென்னை மாநகராட்சியின் புதிய உத்தரவு!
“மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000″ஆக உயர்த்தி வழங்கப்படும்.. முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி!!
காதலர் தின ஃபீவர்…ஓசூர் ரோஜா விற்பனை படு ஜோர்…ஒரு பூவின் விலை இவ்வளவா?
மகளிர் உரிமைத் தொகை.. “வங்கிக் கணக்கில் ரூ.5,000 வரவு”.. காலையிலேயே சர்ப்ரைஸ் தந்த முதல்வர் ஸ்டாலின்!!
‘ஆட்சியில் பங்கு’ தர மறுத்த முதல்வர்.. ராகுலுடன் பிரவீன் சக்கரவர்த்தி ஆலோசனை.. காங்கிரஸின் அடுத்தக்கட்ட மூவ் என்ன?
சாமியார் வேடத்தில் ஜெயின் கோயில்களில் நோட்டம்..திட்டமிட்டு கிலோ கணக்கில் நகை கொள்ளை..அலேக்காக தூக்கிய போலீசார்!
அமெரிக்க வெளியிட்ட வரைபடத்தில் இந்தியாவுடன் சேர்க்கப்பட்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்
ஆபரேஷன் சிந்தூரின் போது தாக்கப்பட்ட விமான படைத்தளங்களை சீரமைக்கும் பாகிஸ்தான்
ஆவேசம் 2 படம் ரிலீஸ் எப்போது? நடிகர் ஃபஹத் ஃபாசில் கொடுத்த அப்டேட்
ஒரு சக்தி என் உடலுக்குள் நுழைந்தது.. நடிகை சுதா சந்திரன் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்