AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“அங்க போனா நிலைமை ரொம்ப மோசமா இருக்கும்”.. திமுக கூட்டணியில் இருந்து விலகிய கட்சிகளை விமர்சித்த முத்தரசன்!

மேடையில் தனது உரையைத் தொடங்கிய முத்தரசன், தற்கால அரசியல் சூழலில் கட்சிகளுக்கு இடையே இருக்க வேண்டிய "கொள்கை உறுதி" எவ்வளவு முக்கியமானது என்பதை விரிவாக எடுத்துரைத்தார். சுயநலத்திற்காகவும், தற்காலிக லாபத்திற்காகவும் கூட்டணிகளை மாற்றுபவர்களை நோக்கி அவர் ஆற்றிய உரை அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

“அங்க போனா நிலைமை ரொம்ப மோசமா இருக்கும்”.. திமுக கூட்டணியில் இருந்து விலகிய கட்சிகளை விமர்சித்த முத்தரசன்!
சிபிஐ முத்தரசன்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 26 Jun 2026 08:17 AM IST

திருவாரூர், ஜுன் 26: திருவாரூரில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், திமுக கூட்டணியை விட்டு அண்மையில் வெளியேறிய அரசியல் கட்சிகளைப் பழமொழிகள் மற்றும் உவமைகள் மூலம் காரசாரமாக, மறைமுகமாக விமர்சித்துப் பேசியுள்ளார். அரசியல் கட்சிகளுக்குக் கொள்கைதான் மிக முக்கியமானது என்பதை வலியுறுத்தினார். தற்போதைய அரசியல் சூழலை ஆடு, மாடு மேயும் மந்தைக்கு ஒப்பிட்டு அவர் விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க: அமோனியா வாயு கசிவு உயிரிழப்பு சம்பவம்.. 3 பேர் குழு அதிரடி விசாரணை.. முதல்வரிடம் விரிவான அறிக்கை தாக்கல்!

அரசியலுக்குக் கொள்கையே பிரதானம்:

மேடையில் தனது உரையைத் தொடங்கிய முத்தரசன், தற்கால அரசியல் சூழலில் கட்சிகளுக்கு இடையே இருக்க வேண்டிய “கொள்கை உறுதி” எவ்வளவு முக்கியமானது என்பதை விரிவாக எடுத்துரைத்தார். சுயநலத்திற்காகவும், தற்காலிக லாபத்திற்காகவும் கூட்டணிகளை மாற்றுபவர்களை நோக்கி அவர் ஆற்றிய உரை அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்றுப் படுகை உவமையும், ‘மந்தை’ விமர்சனமும்:

“ஆற்றுப் பகுதிகளில் ஆடு, மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும் போது, அவைகளுக்குத் தான் நிற்குமிடத்து புற்களை விட ஆற்றின் மறுபுறம் இருக்கும் பகுதிதான் அதிகப் பசுமையாகத் தெரியும். ‘இக்கரைக்கு அக்கரை பச்சை’ என்று நம் முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள்? மனிதர்களின் பேராசை குணம் அங்கேயும் வெளிப்படுகிறது. அரசியல் களத்திலும் அப்படித்தான் நடக்கிறது. இங்கிருந்து முதலில் ஒரு குதிரை ஓடும். அதைப் பார்த்துவிட்டு பின்னாடியே ஒரு ஆடு போகும், அப்புறம் அதைத் தொடர்ந்து ஒரு மாடு போகும். கடைசியில் பார்த்தால், ஒட்டுமொத்த மந்தையே அந்தப் பக்கமாகப் பெயர்ந்து போய்விடும். ஆனால், அப்படி ஆசைப்பட்டு மறுபக்கம் போனால், அங்குள்ள நிஜமான நிலைமை இங்கிருந்ததை விட ரொம்ப மோசமாக இருக்கும்.

இங்கேயாவது கொஞ்ச நேரமாவது பசுமை தெரியும்; ஆனால், அந்தப் பக்கம் போனால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒன்றுமே இருக்காது, எல்லாம் காஞ்சு போய் வறண்டு கிடக்கும். அங்கே போன பிறகுதான் அவர்களுக்கு உறைக்கும், ‘ஆஹா… தப்பான இடத்துக்கு வந்துட்டோமே’ என்று வருத்தப்படுவார்கள். சரி, ஆசைப்பட்டு வந்தாச்சு… வந்த உடனே திரும்பவும் ஓடி வர முடியுமா? மானப் பிரச்சினை தடுத்துவிடும். வேறு வழியே இல்லாமல், அந்தப் படுகையை மனமில்லாமல் ஏற்றுக்கொண்டு, ‘சரி… கொஞ்ச நாள் இங்கேயே இருந்துவிட்டுப் போகலாம்’ என்று சகித்துக் கொள்ளும் சூழல் தான் அவர்களுக்கு ஏற்படும்” என்று மிக ஆழமாகச் சாடினார்.

மேலும் படிக்க: “உள்ளுக்குள் ஊமைக்காயம் இருக்கிறது.. 2 நாட்களில் முக்கிய முடிவு”.. வைகோ அதிரடி அறிவிப்பு!!

யாரையும் தனிப்பட்ட முறையில் சொல்லவில்லை:

முன்னாள் முதலமைச்சர் மற்றும் தற்போதைய கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் இந்த உவமையைக் கூறிவிட்டு, உடனே சுதாரித்துக் கொண்ட முத்தரசன், “நான் இந்த மேடையில் யாரையும் தனிப்பட்ட முறையிலோ அல்லது ஒரு குறிப்பிட்ட கட்சியின் பெயரைக் குறிப்பிட்டோ சொல்லவில்லை. பொதுவாக நடக்கும் அரசியல் சூழலைத்தான் சொல்கிறேன், யாரும் தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்று நயமாக மழுப்பினார்.

Follow Us