எத்தனை அடிமைகளோடு வந்தாலும் சரி… இந்த ஸ்டாலினைத் தாண்டி நடக்காது – முதல்வர் உறுதி
MK Stalin: கள்ளக்குறிச்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இங்கு மத அரசியலுக்கு இடமில்லை. தமிழ்நாட்டின் மத நல்லிணக்கம் பாஜகவின் கண்களுக்கு எரிச்சலாக இருக்கிறது. எத்தனை அடிமைகளோடு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் அவர்களை விரட்டியடிப்பார்கள் என்றார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
கள்ளக்குறிச்சி, டிசம்பர் 26: பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைக்க டிசம்பர் 26, 2025 அன்று கள்ளக்குறிச்சி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) மக்கள் முன்னிலையில் பேசினார். அப்போது பேசிய அவர் கிறிஸ்துமஸ் (Christmas) தினத்தில்கூட மதவாத தாக்குதல்கள் நடைபெற்றது வேதனை அளிக்கிறது. தமிழ்நாடு மத நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்ட மாநிலம். இங்கு மத அரசியலுக்கு இடமில்லை. தமிழ்நாட்டின் மத நல்லிணக்கம் பாஜகவுக்கு கண் எரிச்சலாக இருக்கிறது, எத்தனை அடிமைகளோடு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் அவர்களை விரட்டியடிப்பார்கள். இந்த ஸ்டாலினை தாண்டி எதுவும் நடக்காது. திராவிட மாடல் அரசு 2.0 தொடரும் என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மேலும் பேசிய அவர், திராவிட மாடல் அரசு என்பது வெறும் வாக்குறுதிகளால் இயங்கும் அரசு அல்ல. மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் திட்டங்களை செயல்படுத்தி, மக்களுடன் நேரடி தொடர்பில் இயங்கும் அரசு. இந்த அரசின் கீழ் தீயணைப்பு நிலையங்கள், உயர்மட்டப் பாலம், சாலைகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் என்பது இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் கவனித்து பின்பற்றும் திட்டமாக மாறியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் 3.18 லட்சம் பெண்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். என்றார்.
இதையும் படிக்க : பாமகவில் அடுத்த அதிரடி.. ஜி.கே மணியை கட்சியில் இருந்து நீக்கி அன்புமணி அறிக்கை..
கள்ளக்குறிச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோ
இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் தனிக்காட்டு ராஜா என்பதுபோல, நாம் பெற்றுள்ள 11.19 விழுக்காடு இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி! GSDP-லேயும் தமிழ்நாடுதான் நம்பர் ஒன்! மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியா! ஆட்டோமொபைல் உற்பத்தியா! தோல் அல்லாத காலணிகள் உற்பத்தியா! ஸ்டார்ட்-அப் தரவரிசையா!… pic.twitter.com/PmGO5wUbGh
— DMK (@arivalayam) December 26, 2025
கள்ளக்குறி மாவட்டத்திற்கு புதிய வளர்ச்சித் திட்டங்களை அறிவித்த முதல்வர்
இதனுடன், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு புதிய வளர்ச்சித் திட்டங்களையும் முதல்வர் அறிவித்தார். அப்போது பேசிய அவர், கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு பயனளிக்கும் வகையில் விடியல் திட்டம் மேம்படுத்தப்படும். சங்கராபுரம் அருகே 18.5 கோடி ரூபாய் செலவில் மின் துணை நிலையம் அமைக்கப்படும். உளுந்தூர்பேட்டை அரசு கல்லூரியில் 18 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்படும். ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட்பட்ட வானவரம் பகுதியில் 6.5 கோடி ரூபாய் செலவில் புதிய ஊராட்சி அமைக்கப்படும். திருக்கோவிலூர் பகுதியில் 5 கோடி ரூபாய் செலவில் சேமிப்பு கிடங்கு அமைக்கப்படவுள்ளது. உளுந்தூர்பேட்டை சேரநாடு கிராமத்தில் சிப்காட் தொழில் பூங்கா உருவாக்கப்படவுள்ளது என்றார்.
இதையும் படிக்க : எந்த பேச்சுவார்த்தையும் கூடாது.. அரசியல் கட்சிகளுக்கு ராமதாஸ் தரப்பில் எச்சரிக்கை..
கிறிஸ்துமஸ் தினத்தில்கூட மதவாத தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது வருத்தமளிக்கிறது. தமிழ்நாடு மத நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்ட மாநிலம். இங்கு மத அரசியலுக்கு இடமில்லை. தமிழ்நாட்டின் மத நல்லிணக்கம் பாஜகவின் கண்ணிற்கு உறுத்தலாக இருக்கிறது. எத்தனை அடிமைகளோடு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் அவர்களை விரட்டியடிப்பார்கள். இந்த ஸ்டாலினைத் தாண்டி எதுவும் நடக்காது. திராவிட மாடல் அரசு 2.0 தொடரும் என்று பேசினார்.