Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழக வெற்றிக் கழகத்தில் ஓபிஎஸ்…உறுதி செய்த செங்கோட்டையன்?

AIADMK Key Points Will Soon Be Merged Tvk : அதிமுகவின் மிக முக்கிய புள்ளிகள் மற்றும் ஓபிஎஸ் அணி விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக அந்தக் கட்சியின் தலைமை நிர்வாக குழுவின் ஒருங்கிணைப்பாளர் கே. ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார் .

தமிழக வெற்றிக் கழகத்தில் ஓபிஎஸ்…உறுதி செய்த செங்கோட்டையன்?
தவெகவில் விரைவில் இணையும் அதிமுக புள்ளிகள்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 25 Dec 2025 12:58 PM IST

இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் கே. ஏ. செங்கோட்டையன் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக வெற்றிக் கழகத்தில் உள்ள நபர்களும், புதிதாக இணைந்தவர்களும் சேர்ந்து வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாமை வெற்றிகரமாக நடத்தி, தமிழகத்தில் முதல் மாவட்டமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களின் பட்டியலை கட்சியின் தலைமையிடம் விரைவில் சமர்ப்பிப்போம். ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அவருடன் இருக்கும் மாவட்ட செயலாளர்கள் பலர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இதில், பெரும்பாலானவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம் என்று கூறியுள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் ஓ. பன்னீர்செல்வம் தான் முடிவுகளை மேற்கொள்வார். திமுகவுக்கு எதிராக ஒவ்வொரு இயக்கத்தில் உள்ள தலைவர்களும் ஒவ்வொரு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தவெக தலைமையின் முடிவு படி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை என்ன முடிவு செய்கிறதோ, அதை ஏற்று நாங்கள் பணி செய்ய தயாராக உள்ளோம். அண்மையில் ஈரோட்டில் நடைபெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில் இரண்டு லட்சம் பேர் பங்கேற்ற அந்த கூட்டத்தில் தனது கருத்துக்களை விஜய் தெளிவாக முன் வைத்துள்ளார். இந்த பொதுக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எழுப்பிய இரண்டு கேள்விகளுக்கு அந்தக் கூட்டத்தில் இருந்து பலமான கர ஓசை எழுந்தது. அது தான் அந்த கேள்விகளுக்கான விளக்கமாகும்.

மேலும் படிக்க: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு

அதிமுகவின் முக்கிய புள்ளிகள்

ஒவ்வொரு இயக்கத்தை சேர்ந்தவர்களும் நட்பின் அடிப்படையில் மற்ற இயக்கத்தை சேர்ந்தவர்களுடன் கலந்து பேசுவது இயல்பாகும். எதிர் காலத்தில் யார் யார் கூட்டணிக்கு வருகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.அதிமுகவில் இருந்து மிக முக்கிய புள்ளிகள் வெகு விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார்கள் என்று தெரிவித்தார்.

அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு

அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி பூசல் காரணமாக அந்த கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இணைந்தார். அப்போது, அதிமுக கூட்டணியில் அதிருப்தியில் உள்ள மிக முக்கிய தலைவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக மிகப்பெரிய அணு குண்டை வீசி இருந்தார்.

செங்கோட்டையன் வீசிய மற்றொரு குண்டு

இதனால், அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது, அ தி மு க வில் உள்ள முக்கிய புள்ளிகள் வெகு விரைவில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வருவார்கள் என்று கே. ஏ. செங்கோட்டையன் கூறியுள்ளது மீண்டும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

மேலும் படிக்க: அதிமுக-பாஜக கூட்டணியை வீழ்த்துவதே இலக்கு…பெ. சண்முகம்!