தமிழகத்தில் களைக்கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.. தேவாலயங்களில் நள்ளிரவு முதல் சிறப்பு பிரார்த்தனை..
Christmas 2025: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களது வீடுகளில் கிறிஸ்துமஸ் மரங்களை அலங்கரித்து, இயேசு பிறந்த குடில்களை அமைத்து, வீட்டு வாசல்களில் ஸ்டார் விளக்குகளை வைத்து கொண்டாடி வருகின்றனர். அதேபோல், ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் சாண்டா கிளாஸ் வேடமணிந்து மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்
சென்னை, டிசம்பர் 25, 2025: தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் நள்ளிரவு திருப்பலி நடைபெற்று வருகிறது. இதில் திரளான மக்கள் பங்கேற்று பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். கிறிஸ்தவர்களின் மிக முக்கியமான பண்டிகையாக கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. இயேசுபிரான் பிறந்த நாளான இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள தேவாலயங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றன.
களைக்கட்டிய கிறிஸ்துமஸ் விழா:
சென்னையைப் பொறுத்தவரையில், சாந்தோம், பெசன்ட் நகர் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் விமர்சையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் இணைந்து, நள்ளிரவு முதலே தேவாலயங்களில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனைகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு.. நீலகிரி, கொடையில் தொடரும் உறைபனி.. நிலவரம் என்ன?
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களது வீடுகளில் கிறிஸ்துமஸ் மரங்களை அலங்கரித்து, இயேசு பிறந்த குடில்களை அமைத்து, வீட்டு வாசல்களில் ஸ்டார் விளக்குகளை வைத்து கொண்டாடி வருகின்றனர். அதேபோல், ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
பாதுகாப்பு பணியில் 8000 போலீசார்:
டிசம்பர் 25, 2025 தேதியான இன்று, உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாகவும், எந்தவொரு அச்சுறுத்தலும் இன்றி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்காக, சென்னையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியுள்ளனர். சுமார் 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: VIBE WITH MKS.. தமிழ்நாட்டின் இளம் வீரர்களுடன் கலகலப்பாக பேசிய முதல்வர் ஸ்டாலின்..
தேவாலயங்கள், கடற்கரை, வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சாந்தோம், பெசன்ட் நகர், பாரிமுனை, சைதாப்பேட்டை, சின்னமலை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் கூடுதல் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்:
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் சாண்டா கிளாஸ் வேடமணிந்து மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். வீடுகள், தெருக்கள் மற்றும் வணிக வளாகங்களில் கிறிஸ்துமஸ் இசை ஒலித்து, பண்டிகை சூழல் நிறைந்துள்ளது. பல இடங்களில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சிறப்பு கலாச்சார நிகழ்ச்சிகள், கிறிஸ்துமஸ் கரோல் பாடல்கள், நாடகங்கள் மற்றும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. தேவாலய வளாகங்களில் குழந்தைகளுக்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
கிறிஸ்துமஸ் என்பது அன்பு, சமாதானம், சகோதரத்துவம் மற்றும் மனிதநேயத்தை வலியுறுத்தும் பண்டிகையாக இருப்பதால், ஏழை எளிய மக்களுக்கு உணவு, உடை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கும் சேவை பணிகளிலும் பலர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா தலங்கள், கடற்கரை பகுதிகள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
இவ்வாறு, மத வேறுபாடுகளைத் தாண்டி, அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை மகிழ்ச்சியுடனும் அமைதியுடனும் கொண்டாடி வருகின்றனர்.