Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தூத்துக்குடி-மீளவிட்டான் ரயில் நிலையங்களில் இன்டர் லாக்கிங் சிஸ்டம் அமைப்பு…மதுரை கோட்டத்தில் இதுவே முதல் முறை!

Interlocking System Setup Thoothukudi- Meelavittan Railway Stations: மதுரை கோட்டத்தில் தூத்துக்குடி மற்றும் மீளவிட்டான் ரயில் நிலையங்களில் முதன் முறையாக இன்டர் லாக்கிங் சிக்னல் சிஸ்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த வழித்தடத்தில் விபத்துகள் நிகழ்வது முற்றிலுமாக தடுக்கப்படும் .

தூத்துக்குடி-மீளவிட்டான் ரயில் நிலையங்களில் இன்டர் லாக்கிங் சிஸ்டம் அமைப்பு…மதுரை கோட்டத்தில் இதுவே முதல் முறை!
தூத்துக்குடி,மீளவிட்டான் ரயில் நிலையத்தில் இன்டர் லாக்கிங் சிஸ்டம்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 26 Dec 2025 06:44 AM IST

மதுரை ரயில்வே கோட்டத்தில் பல்வேறு ரயில் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ரயில் நிலையங்களில், தூத்துக்குடி மற்றும் மீளவிட்டான் ஆகிய இரு ரயில் நிலையங்களில் முதன் முதலாக நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய புதிய இன்டர் லாக்கிங் சிக்னல் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மூலம் ரயில்களின் செயல்பாட்டுத் திறன் மற்றும் பாதுகாப்பு ஆகியவை வழக்கமான அமைப்புகளை விட தற்போது அதிகமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து விதமான ரயில்களையும் கையாளும் வகையில் கணினியின் அடிப்படையில் என் அமைப்பானது அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரு ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் ரயில் போக்குவரத்துக்காக க்ளியர் செய்யும் அமைப்பு இன்டர் லாக்கிங் சிக்னல் மென் பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

விபத்துகள் முற்றிலுமாக தவிர்க்கப்படும்

இந்த இரு ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் உள்ள லெவல் கிராசிங்குகள் இன்டர் லாக்கிங் சிஸ்டம் முறைக்கு மாற்றப்பட்டுள்ளதால் விபத்துக்கள் முற்றிலுமாக தவிர்க்கப்படும். தூத்துக்குடி மற்றும் மீளவிட்டான் ஆகிய இரு ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை அமைப்பதற்காக இரு நிலையங்களிலும் கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி முதல் 23- ஆம் தேதி வரை யார்டுகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தன.

மேலும் படிக்க: இனி லைசென்ஸ் கட்டாயம்… இடியாப்ப வியாபாரிகளுக்கு வந்து புதிய சிக்கல் – காரணம் என்ன?

தூத்துக்குடியில் ரயில் நடைமேடைகள் தரம் உயர்த்தும் பணி

இதே போல, தூத்துக்குடி ரயில் நிலையத்தில் மிக நீளமான ரயில்களை நிறுத்தும் வகையில், அந்த ரயில் நிலையத்தின் முதல் நடைமேடை சுமார் 595 மீட்டராக அதிகரிக்கப்பட்டதுடன், 552 மீட்டரில் புதிய நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. 22 எல். ஹெ. பி வகையான பெட்டிகள் உடைய ரயில்களை பராமரிப்பதற்காக பிட் லைன்களும் நீட்டிக்கப்பட்டதுடன், ரயிலின் எஞ்சின்கள் முன்புறத்தில் இருந்து பின்புறத்துக்கு எளிதாக சென்று வருவதற்காக தனி இருப்பு பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மீளவிட்டான் ரயில் நிலையத்திலும்…

மின் கம்பிகளை சோதனை செய்யும் வாகனத்திற்கு தனி ஷெட், மீளவிட்டான் ரயில் நிலையத்தில் ஷண்டிங் பயன்பாட்டுக்காக சுமார் 750 மீட்டர் தண்டவாளம், சரக்கு எடுத்துச் செல்லும் ரயில்களுக்காக கான்கிரீட் தளம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 2026 ஜனவரி 1- ஆம் தேதி முதல் விருதுநகர் மற்றும் மதுரை வழியாக தினந்தோறும் இயக்கப்பட்டு வரும் முத்துநகர் ரயில் (12694), தூத்துக்குடியில் இருந்து இரவு 8:40- க்கு பதிலாக 9:05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7:40 மணிக்கு பதிலாக 7:35 மணிக்கு சென்னை எக்மோர் சென்றடையும்.

இரு ரயில்களின் நேரம் மாற்றம்

இதே போல, வியாழக்கிழமை, சனிக்கிழமை தோறும் இயக்கப்பட்டு வரும் மேட்டுப்பாளையம் ரயில் (16766), தூத்துக்குடியில் இருந்து இரவு 10:50 மணிக்கு பதிலாக 11:40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7:40 மணிக்கு வழக்கம் போல மேட்டுப்பாளையம் சென்றடையும். இந்த இரு ரயில்களும் மறு மார்க்கத்தில் இயக்கப்படும் நேரங்களில் மாற்றம் செய்யப்படவில்லை.

மேலும் படிக்க: மழையும் இருக்கு பனியும் இருக்கு.. எத்தனை நாட்களுக்கு? வானிலை சொல்வது என்ன?