அதிமுக தேர்தல் அறிக்கை குழு – யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன் படி அந்த குழுவில் நத்தம் விஸ்வநாதன், ஓ.எஸ்.மணியன், சி.வி.சண்முகம், செம்மலை, பொள்ளாச்சி ஜெயராமன், பொன்னையன், வளர்மதி, ஜெயக்குமார், ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
சென்னை, டிசம்பர் 25 : வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக (ADMK) சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K Palaniswami) டிசம்பர் 2025 அன்று அறிவித்துள்ளர். அதன் படி அந்த குழுவில் நத்தம் விஸ்வநாதன், ஓ.எஸ்.மணியன், சி.வி.சண்முகம், செம்மலை, பொள்ளாச்சி ஜெயராமன், பொன்னையன், வளர்மதி, ஜெயக்குமார், ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் ஒவ்வொரு ஊராக சென்று மக்களின் கருத்துக்களை கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிப்பார்கள் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் அறிவிப்புகள் குறித்து மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதிமுகவின் தேர்தல் அறிக்கை குழு
2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளன. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த ஆண்டு தேர்தலில் புதிதாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் களமிறங்கவிருக்கிறது. இந்த தேர்தலில் அந்த கட்சி எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள தங்கள் கணிப்புகளை வெளிப்படுத்தி வருகின்றன. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம், தொண்டர்களின் செயல்பாடுகள் என அந்த கட்சி விமர்சனங்களை சந்தித்து வருகின்றன.
இதையும் படிக்க : 100 நாள் வேலை திட்டத்தில் திமுக ஊழல் செய்ய முடியாது…நயினார் நாகேந்திரன்!
இந்த தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து அதிமுக தேர்தலில் களமிறங்கவிருக்கிறது. இந்த சூழலில் தான் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தொடர்பான அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். இந்த குழுவில், ஆர்.பி.உதயகுமார், ஓ.எஸ்.மணியன், வைகை செல்வன், வளர்மதி, பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
தேர்தல் அறிக்கை குழுவை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி
சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் – 2026
தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுமாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு. pic.twitter.com/eO07zKxwpS
— AIADMK – SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) December 25, 2025
இதையும் படிக்க : தமிழக வெற்றிக் கழகத்தில் ஓபிஎஸ்…உறுதி செய்த செங்கோட்டையன்?
இந்த நிலையில் தமிழகத்திற்கான பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் கடந்த டிசம்பர் 23, 2025 அன்று தமிழகம் வந்தார். இந்த நிலையில் அவருடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்தை நடத்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக பாஜக சார்பில் 50 தொகுதிகளை கேட்பதாக கூறப்பட்டது. மேலும் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் அதிமுக கூட்டணியில் கொண்டுவருவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தான், எடப்பாடியுடன் இணைய வாய்ப்பில்லை என்பதை ஓ.பன்னீர் செல்வம் உறுதியாக தெரிவித்தார்.



