Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திமுகவுக்கு எதிராக அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்…என்ன அது!

Aiadmk Resolution Against Dmk: திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக அதிமுக பொதுக் குழுவில் திமுக அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .

திமுகவுக்கு எதிராக அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்…என்ன அது!
திமுகவுக்கு எதிராக அதிமுக தீர்மானம்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 10 Dec 2025 13:16 PM IST

சென்னை, வானகரத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று புதன்கிழமை (டிசம்பர் 10) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், சுமார் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக திமுக அரசை கண்டித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, 15- ஆவது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ள இந்த தீர்மானமானது, இரு பக்கங்கள் கொண்டுள்ளது. அதில், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக திமுக அரசு சவால் விட்டுள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மேல்முறையீடு என்ற பெயரில் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. நீதித்துறை சுயமாக செயல்பட வேண்டும் என்றால் அதன் தனித்தன்மை காப்பாற்றப்பட வேண்டும்.

நீதித்துறையில் அரசின் தலையீடு இருக்கக் கூடாது

அப்படிப்பட்ட நிலைமை ஏற்பட வேண்டும் என்றால் ஆட்சியாளர்களின் தலையீடு இருக்கக் கூடாது. ஆட்சியர்கள் மிரட்டல் போக்கை கைவிட வேண்டும். சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டும். நீதித்துறையில் அரசின் தலையீடு இருக்கக்கூடாது என்ற பொது மக்களின் மனநிலையை இந்த பொதுக்குழு பிரதிபலிக்கிறது. நீதித்துறைக்கே சவால் விடும் இந்த திமுக அரசின் ஆதிக்க போக்கை அதிமுக வன்மையாக கண்டிக்கிறது.

மேலும் படிக்க: உருவாகும் புதிய கூட்டணி..? விஜய் பேச்சால் பரபரக்கும் அரசியல் களம்!

ஜனநாயகத்தின் 3- ஆவது தூணாக விளங்கும் நீதித்துறை

ஜனநாயகத்தின் 3- ஆவது தூணாக விளங்கக்கூடிய நீதித்துறை மக்களின் உரிமைகளை பாதுகாக்கிறது. நியாயமான தீர்ப்புகள் தங்களுக்கு சாதகமாக இல்லை என்ற நிலையில் அதனை தாமதப்படுத்துவதும், மேல்முறையோடு என்ற பெயரில் அந்த தீர்ப்புக்கு முட்டுக்கட்டை போடுவதுமாக திமுக ஆட்சியில் வாடிக்கையாகிவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதித்துறையை ஆட்சியாளர்கள் மதிக்காத நிலை

இது மட்டுமின்றி ஆட்சி பொறுப்பில் இருக்கக் கூடிய முக்கிய நிர்வாகிகள் தீர்ப்புக்கு தவறான விளக்கம் கொடுப்பது, தீர்ப்பை விமர்சனம் செய்வது, நீதிபதிகளை மறைமுகமாக விமர்சனம் செய்வது ஆகியவை நீதித்துறையை ஆட்சியாளர்கள் மதிக்காத நிலையை காட்டுகிறது என அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீப தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

முக்கியத்துவம் வாய்ந்ததாகும் அதிமுக தீர்மானம்

இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. மேலும், திமுக எம். பி. க்கள் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை கிளப்பியிருந்தனர். இந்த சூழ்நிலையில், அதிமுக பொதுக் குழுவில் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: அதிமுக பொதுக்குழுவில் 8 தீர்மானம் நிறைவேற்றம்…அவை என்னென்ன!