AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இன்று தமிழகத்தில் எங்கெல்லாம் மழை இருக்கும்? வானிலை சொல்லும் தகவல் என்ன?

Tamil Nadu Weather Alert: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சுமார் 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை சுமார் 25 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இன்று தமிழகத்தில் எங்கெல்லாம் மழை இருக்கும்? வானிலை சொல்லும் தகவல் என்ன?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 21 Mar 2026 06:25 AM IST

வானிலை நிலவரம், மார்ச் 21, 2026: தமிழகத்தில் ஒரு பக்கம் வெப்பநிலையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரக்கூடிய நிலையில், மறுபக்கம் மழையும் பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் 8 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. மேலும், பல்வேறு மாவட்டங்களிலும் நல்ல மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தொடரும் மழை:

இதற்கிடையில், மன்னார் வளைகுடா முதல் வடக்கு உள் கர்நாடகா வரை வளிமண்டலச் சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, மார்ச் 21, 2026 ஆகிய இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், தமிழகத்தின் பிற பகுதிகளில் ஓரளவு மேகமூட்டத்துடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மார்ச் 22ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மட்டும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, மார்ச் 23 முதல் 26ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும் என்றும், பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மாணவர்கள் கவனத்திற்கு.. 1 முதல் 9 ஆம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு..

அதிகபட்ச வெப்பநிலை எப்படி இருக்கும்?

அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது; இயல்பை ஒட்டி இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சுமார் 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை சுமார் 25 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பெரம்பூர் தொகுதியில் களமிறங்கும் விஜய்… கை கொடுக்குமா? காலை வாருமா? கள நிலவரம் கூறுவதென்ன!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மதுரையில் அதிகபட்சமாக 37.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து கரூரிலும் 37.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. வேலூரில் 36.3 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 36 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூரில் 35 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 36.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. சென்னை நகரைப் பொருத்தவரையில், மீனம்பாக்கத்தில் 34 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 32.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Follow Us