AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னை மக்களே அலர்ட்.. 39 மின்சார ரயில்கள் ரத்து.. எந்த ரூட் தெரியுமா?

Chennai EMU Train Cancelled : சென்னையில் கும்மிடிப்பூண்டி பென்னோரி ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக, அவ்வழியாக இயக்கப்படும் மின்சார ரயில்கள் 2025 ஜூன் 24ஆம் தேதியான இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை மக்களே அலர்ட்.. 39 மின்சார ரயில்கள் ரத்து..  எந்த ரூட் தெரியுமா?
சென்னை மின்சார ரயில்கள்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 24 Jun 2025 09:42 AM IST

சென்னை, ஜூன் 24 : சென்னையில் மின்சார ரயில்கள் (Chennai EMU Train Cancelled) 2025 ஜூன் 24ஆம் தேதியான இன்று ரத்து செய்யப்படுகிறது. கும்மிடிப்பூண்டி பென்னோரி ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அவ்வழியாக இயக்ககப்படும் 34 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.  சென்னையில் முக்கிய போக்குவரத்து சேவைகளில் ஒன்றாக இருப்பது மின்சார ரயில் சேவைகள்.  சென்னையின் புறநகர் பகுதிகளையும் இணைக்கக் கூடியது என்பதால்,  மக்கள் பெரிதும் மின்சார ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர்.  நாள்தோறும் மின்சார ரயில்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.

சென்னையில் 36 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு, வேளச்சேரி – கடற்கரை உள்ளிட்ட வழித்தடங்களிலும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.  பயணிகளுக்கு சீரான பயணத்தை வழங்க அவ்வப்போது பராமரிப்பு பணிகள்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பராமரிப்பு பணியின்போது சில ரயில்கள் ரத்து செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில், 2025 ஜூன் 24ஆம் தேதியான இன்று  36 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதகா தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது,  சென்னை கும்மிடிப்பூண்டி பொன்னேரி ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், காலை 9.15 மணி முதல் மாலை 3.15 மணி வரை 6 மணி நேரத்தில் 36 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

எந்தெந்த ரூட் தெரியுமா?

அதன்படி, சென்டரலில் இருந்து இயக்கப்படும் கும்மிடிப்பூண்டி, ஆவடி, சூலூர்பேட்டை ஆகிய மின்சார ரயில்களும், சென்னை கடற்கரையில் இருந்து கும்மிடிப்பூண்டி, நெல்லூர், சூலூர்பேட்டை ரயில்கள் என மொத்தம் 36 ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

இந்த ரயில்கள் காலை 9.15 மணி முதல் மாலை 3.15 மணி வரை ரத்து செய்யப்படுகிறது. மேலும், பயணிகளின் வசதிக்காக காலை 6.50 மணி முதல் மாலை 5.12 மணி வரை 21 சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்ட்ரலில் இருந்து பொன்னேரி, மிஞ்சூர், எண்ணூர் ஆகிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

அதோடு, சென்னை கடற்கரையில் இருந்தும் பொன்னேரி, மிஞ்சூர் உள்ளிட்ட வழித்தடங்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. எனவே, அதற்கு ஏற்றவாறு தங்களது பயணத்தை திட்டமிட்டு கொள்ள வேண்டும் என தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us