AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மிகப்பெரிய மாற்றம்.. பழமை மாறாமல் மேற்கொள்ளப்படுகிறது.. முழு விவரம் இதோ!

Chennai Egmore Railway Station: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.5 கோடியில் வாகன நிறுத்தும் இடம் மற்றும் அதன் பிரதான நுழைவு வாயில் வேறு பகுதிக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. பழைய 2 நுழைவு வாயில்களும் பழைமை மாறாமல் பாதுகாக்கப்பட உள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மிகப்பெரிய மாற்றம்.. பழமை மாறாமல் மேற்கொள்ளப்படுகிறது.. முழு விவரம் இதோ!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பெரிய மாற்றம்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 23 Feb 2026 07:10 AM IST

சென்னையில் உள்ள பழமையான ரயில் நிலையங்களில் 3- ஆவது ரயில் நிலையமாக எக்மோர் ரயில் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலையத்தில் சுமார் 11 நடைமேடைகள் அமைந்துள்ளன. இங்கு இருந்து தினந்தோறும் தென் மாவட்டங்கள் மற்றும் வட மாநிலங்களுக்கு 46 ரயில்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு தினந்தோறும் ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதே போல, தினந்தோறும் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து 80 புறநகர் மின்சார ரயில்கள் 205 முறை இயக்கப்பட்டு வருகிறது. இதனால், தினந்தோறும் இந்த ரயில் நிலையத்தில் சுமார் 1.5 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த ரயில் நிலையத்தில் இந்தோ சராசெனிக் கட்டடக்கலை வடிவத்தில் 2 நுழைவு வாயில்கள் மற்றும் நடைமேடைகளுக்கு செல்வதற்காக 3 நடை மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

ரூ.820 கோடியில் மறு சீரமைப்ப பணிகள்

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி மேற்கொள்வதற்காக கடந்த 2022- ஆம் ஆண்டு ரூ.400 ஒதுக்கப்பட்டு தனியார் நிறுவனம் மூலம் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, அந்த தொகை ரூ.820 கோடியாக உயர்த்தப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில், பயணிகள் ரயில்கள் நிற்கும் பகுதி, வர்த்தக பகுதி என இரு பிரிவுகளாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது இந்த ரயில் நிலையத்தில் மிக பழமையான கலை வடிவத்துடன் கூடிய 2 நுழைவு வாயில்களையும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கொடைக்கானலில் நடிகையின் தந்தை சினிமா பாணியில் கொலை – வெளியான அதிர்ச்சி தகவல்

எழும்பூர் ரயில் நிலையத்தில் புதிய நுழைவு வாயில்

இதன் காரணமாக அதனை இடிக்காமல், எழும்பூர் ஆவண காப்பகம் எதிரே புதிய நுழைவு வாயில் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பிரதான நுழைவு பகுதியில் இருந்து பூந்தமல்லி சாலையில் மெட்ரோ ரயில் பகுதி வரை சுமார் 70 மீட்டர் அகலத்தில் புதிய நடைமேடை பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த பாலத்தின் வழியாக அனைத்து நடைமேடைகளையும் பயணிகள் சென்றடையலாம். மேலும், 21,510 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.5 கோடிக்கு மேல் மிக நவீன வாகன நிறுத்தும் இடம் மற்றும் வியாபார தலங்களாக 2, 3, 4 ஆகியவை வாகன நிறுத்தும் இடங்களாகவும் இருக்கும்.

4500 பைக்குகள்- 500 கார்கள்

வாகன நிறுத்தும் வளாகத்தில் ஒரே நேரத்தில் சுமார் 4,500 இரு சக்கர வாகனங்களும், 500- இருக்கும் மேற்பட்ட கார்களும் நிறுத்தம் செய்யலாம். வருகிற ஏப்ரல் மாதத்துக்குள் இந்த வாகன நிறுத்தும் இடம் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இரு பிரிவாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இதில், சுமார் 700 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். வருகிற 2027 ஆம் ஆண்டுக்குள் இந்த பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: திசை மாறும் காற்றழுத்தம்.. தமிழகத்தில் இன்று கொட்டப்போகுது மழை.. வானிலை நிலவரம் இதோ..