AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னையில் சட்டவிரோத பார் மற்றும் மதுபாட்டில் விற்பனை.. அதிரடி காட்டிய போலீஸ் – 16 பேர் கைது..

சட்டவிரோதமாக செயல்படும் பார்கள், மதுபாட்டில்களை பதுக்கி வைத்து சில்லறை விற்பனையில் ஈடுபடுபவர்கள் குறித்து கண்காணிக்கும் வகையில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து சுமார் 500 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகர எல்லைக்குள் சட்டவிரோதமாக பார்கள் நடத்துபவர்கள் மற்றும் சில்லறையாக மதுபாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

சென்னையில் சட்டவிரோத பார் மற்றும் மதுபாட்டில் விற்பனை.. அதிரடி காட்டிய போலீஸ் – 16 பேர் கைது..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 16 May 2026 07:14 AM IST

சென்னை, மே 16, 2026: சென்னையில் சட்டவிரோதமாக பார்கள் நடத்தியதாக 16 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். அதேபோல், சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் உத்தரவின் பேரில், சென்னையில் உள்ள பல காவல் மண்டலங்களில் அந்தந்த துணை ஆணையர்களின் தலைமையில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன.

500 மதுபாட்டில்கள் பறிமுதல்:

சட்டவிரோதமாக செயல்படும் பார்கள், மதுபாட்டில்களை பதுக்கி வைத்து சில்லறை விற்பனையில் ஈடுபடுபவர்கள் குறித்து கண்காணிக்கும் வகையில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து சுமார் 500 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வேளச்சேரி 100 அடி சாலையில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பார் மூடப்பட்டது. அங்கு பணியாற்றிய பிரபாகரன் மற்றும் சபரிமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதேபோல், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் செயல்பட்ட பார் மூடப்பட்டு, அங்கு பணியாற்றிய நான்கு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவொற்றியூர் – எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலை டாஸ்மாக் கடை அருகே சில்லறையாக மதுபாட்டில்கள் விற்றதாக நீதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மதுபாட்டில்களை சில்லறையாக விற்றதாக ராஜபாண்டி, ரகுபதி மற்றும் லட்சுமணன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

16 பேர் கைது செய்து அதிரடி:

சென்னை கொண்டித்தோப்பு அம்மன் கோவில் தெருவில் சட்டவிரோதமாக செயல்பட்ட பார் மூடப்பட்டு, அங்கு வேலை பார்த்த ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேபோல், ஓட்டேரி, பழைய வண்ணாரப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, பாரதியார் நகர், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை உள்ளிட்ட பல இடங்களிலும் சட்டவிரோத பார்கள் மற்றும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அரசு நிர்ணயித்த நேரத்தை தாண்டி மதுவிற்பனை நடைபெற்றதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை மாநகர எல்லைக்குள் சட்டவிரோதமாக பார்கள் நடத்துபவர்கள் மற்றும் சில்லறையாக மதுபாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

மேலும் படிக்க: 25 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி ஆளுநரை நேரில் சந்தித்து முறையிட முடிவு.. இபிஎஸ் தீவிர ஆலோசனை!!

தமிழகத்தின் புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து, மதுபானக் கடைகள் மற்றும் மதுபாட்டில் விற்பனை தொடர்பாக கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முதல் கட்டமாக, தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யக்கூடாது என்றும், விதிமுறைகளை மீறினால் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Follow Us