AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஊட்டி அருகே இரவில் குடியிருப்பு பகுதியில் புகுந்த கரடி.. பொதுமக்கள் அச்சம்..

Bear Entered Living Area In Ooty | ஊட்டி உள்ளிட்ட மலைப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் வன விலங்குகள் நடமாடுவது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில், ஊட்டி அருகே உள்ள கோழிப்பண்ணை கிராமத்தில் நள்ளிரவில் கரடி ஒன்று புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊட்டி அருகே இரவில் குடியிருப்பு பகுதியில் புகுந்த கரடி.. பொதுமக்கள் அச்சம்..
ஊருக்குள் உலா வந்த கரடி
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 31 Aug 2026 07:22 AM IST

ஊட்டி, ஆகஸ்ட் 31 : ஊட்டி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் இருக்கும் சுற்றுவட்டார கிராமங்களில் வன விலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ஊட்டி அருலெ குடியிருப்பு பகுதி ஒன்றில் கரடி ஒன்று நள்ளிரவில் உலா வந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடி

ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள கிராமங்களில் கரடி, காட்டு மாடு, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாடுவது அதிகரித்து வருகிறது. இவ்வாறு கிராமங்களுக்குள் நுழையும் வன விலங்குகள் செல்லப்பிராணிகள் மற்றும் பொதுமக்களை தாக்கிய சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. இந்த நிலையில் தான், நள்ளிரவில் குடியிருப்பு பகுதியில் கரடி ஒன்று உலா வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து – 4 சிறுவர்கள் பரிதாப மரணம்

கடும் அதிர்ச்சிக்கு உள்ளான கிராம் மக்கள்

ஊட்டி அருகே உள்ள கோழிப்பண்ணை என்ற கிராமத்தில் நள்ளிரவு நேரத்தில் கரடி ஒன்று புகுந்துள்ளது. அதனை கண்ட வளர்ப்பு நாய்கள் ஒன்றுக்கூடி குரைக்க தொடங்கியுள்ளன. நாய்கள் குரைப்பதை கண்ட கிராம மக்கள் ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளனர். அப்போது ஊருக்குள் கரடி நின்றுக்கொண்டு இருப்பதை கண்டு அவர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

இதையும் படிங்க : ரேசன் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை – வெளியான தகவல்

குப்பை தொட்டியில் உணவு தேடிய கரடி

உணவு, தண்ணீர் தேடி இவ்வாரு ஊருக்குள் புகும் கரடி உள்ளிட்ட வன விலங்குகள் மீண்டும் காட்டுக்கு செல்லாமல் வனப்பகுதியிலேயே தங்கி விடுகின்றன. குறிப்பாக கிராமங்களில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து உணவு தேடுவது, குப்பைத் தொட்டிகளில் உணவு தேடுவதை அவை வழக்கமாக கொண்டுள்ளன. எனவே, இவ்வாறு அடிக்கடி கரடிகள் ஊருக்குள் புகுந்து அட்டாகாசம் செய்வதை தடுக்க வேண்டும் என்றும், கிராம் மக்களுக்கு பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் அந்த கிராமத்தினர் வனத்துறையினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Follow Us