அரியலூரில் வெடித்து சிதறிய சிலிண்டர் லாரி.. அடுத்தடுத்து வெடித்த சிலிண்டர்களால் பரபரப்பு!
Ariyalur Cylinder Lorry Explosion | அரியலூர் மாவட்டம் வாரணாசி அருகே சிலிண்டர் லாரி ஒன்று சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு சென்ற நிலையில் கடும் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதன் காரணமாக லாரியில் இருந்த சிலிண்டர்கள் ஒன்றின் பின் ஒன்றாக வெடித்த நிலையில் பரபரப்பு ஏற்பட்டது.

சிலிண்டர் லாரி விபத்து
வாரணாசி, நவம்பர் 11 : அரியலூர் (Ariyalur) மாவட்டம் வாரணாசி (Varanasi) அருகே சிலிண்டர் லாரி வெடித்து சிதறியதால் (Cylinder Lorry Accident) பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. லாரி சிலிண்டர்களை ஏற்றி வந்த நிலையில், லாரியில் இருந்த சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடிக்க தொடங்கியதால் பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். இதன் காரணமாக அரியலூர் – திருச்சி மற்றும் தஞ்சாவூர் சாலைகளில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அரியலூரில் சிலிண்டர் லாரி வெடித்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
அரியலூரில் வெடித்து சிதறிய சிலிண்டர் லாரி
அரியலூர் மாவட்டம் வாரணாசி அருகே இன்று (நவம்பர் 11, 2025) சிலிண்டர் லாரி ஒன்று சாலையில் சென்றுக்கொண்டு இருந்துள்ளது. இந்த நிலையில், அந்த லாரி திடீரென வெடித்து சிதறியுள்ளது. அந்த லாரியில் ஏராளமான சிலிண்டர்கள் இருந்த நிலையில், அவை ஒன்றின் பின் ஒன்றாக வெடித்து சிதற தொடங்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, அந்த பகுதியில் மிக கடுமையான புகைமூட்டம் காணப்பட்டது. இதனால் கடும் அச்சத்திற்கு உள்ளான பொதுமக்கள் தங்களது உயிர்களை பாதுகாத்துக்கொள்ள அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு ஓடியுள்ளனர்.
இதையும் படிங்க : கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம்.. தீக்குளித்துவிடுவேன் என பெண்ணை மிரட்டிய நபர்!
சிலிண்டர் லாரி விபத்தில் சிக்கியது எப்படி
விபத்தில் சிக்கிய அந்த சிலிண்டர் லாரி இன்று (நவம்பர் 11, 2025) வாரணாசி சாலையில் சென்றுக்கொண்டு இருந்தபோது, வளைவில் திரும்பியுள்ளது. அப்போது எதிர்ப்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு சிலிண்டர்கள் ஒன்றின் பின் ஒன்றாக வெடிக்க தொடங்கியுள்ளது. சிலிண்டர்கள் வெடித்த சத்தம் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்ட நிலையில், வாரணாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதையும் படிங்க : ரூ.2 கோடி கேட்டு தொழிலதிபரை கடத்தி கொலை செய்த நபர்…. சுட்டுப்பிடித்த போலீசார்… ஓசூர் அருகே பரபரப்பு
இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் அளித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் காவல்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த லாரி எங்கிருந்து வந்தது, விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த சுற்று வட்டார பகுதி மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.