AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஹஜ் பயணம் செல்ல விரும்பும் இஸ்லாமியர்களுக்கு… விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் 2027 பயணத்துக்காக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வருகிற ஜூலை 20, 2027 அன்று இரவு 11.59 மணி வரை ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழு இணையதளம் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஹஜ் பயணம் செல்ல விரும்பும் இஸ்லாமியர்களுக்கு… விண்ணப்பங்கள் வரவேற்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 24 Jun 2026 08:33 AM IST

சென்னை, ஜூன் 24 : வருகிற 2027 ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயணம் செல்ல விரும்பும் தமிழகத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஹஜ் 2007-ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடமிருந்து மும்பையிலுள்ள இந்திய ஹஜ் குழுவானது தலல் விண்ணப்பங்களைப் பெற தொடங்கியுள்ளது என்பதை தமிழ் நாடு மாநில ஹஜ் குழு அறிவிக்க விருப்புகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹஜ் பயணம் செல்ல விரும்பும் இஸ்லாமியர்களுக்கு தமிழக அரசு அறிவிப்பு

இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் 2027 பயணத்துக்காக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வருகிற ஜூலை 20, 2027 அன்று இரவு 11.59 மணி வரை ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழு இணையதளம் விண்ணப்பிக்கலாம். இதற்காக உருவாக்கப்பட்ட இந்திய ஹஜ் குழு இணையதளமான https//hajcommittee.gov.in மூலமோ அல்லது HAJ SUVIDHA என்ற செயலியினை பதிவிறக்கம் செய்வதன் மூலம் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

இதையும் படிக்க : தமிழ்நாட்டில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

விண்ணப்பதாரர்கள் தங்கள் தகுதியை உறுதிபடுத்திக்கொள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் உறுதிமொழிப் படிவத்தை கவனமாகப் படித்து பின்வருவனவற்றின் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகளைபதிவேற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

1. விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான இறுதி நாளுக்கு முன்னரோ அல்லது அன்றோ வழங்கப்பட்டதும், குறைந்தது 31.12.2027 செல்லுபடியாகக்கூடியதுமான இயந்திரத்தால் படிக்கத்தக்க இந்திய பாஸ்போர்ட்டின் முன் மற்றும் பின் பக்கங்கள் (1200 x 800 px. JPG/JPEG, 100-500 KB
2. வெள்ளை நிறப் பின்னணிடின் கூய கடவுச்சீட்டு அளவு (480 x 640 px. JPG/JPEG 5-20 KB)
3. வங்கிப் பாஸ்புக்கின் நகல் அல்லது ரத்து செய்யப்பட்ட காசோலை (cancelled cheque) (590 x 750 px. JPG/JPEG, 80-250 KB) ஆகியவற்ற சமர்பிக்க வேண்டியிருக்கும்.
4. முகவரி சான்று (590 x 750 px. JPG/JPEG, 80-250 KB)

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு


கடந்த ஆண்டைப் போலவே தேர்ந்தெடுக்கப்பட்ட ஹஜ் பயணிகள் இரண்டு புறப்பாட்டு தளங்களை தங்கள் விருப்பத்தின் வரிசை அடிப்படையில் தேர்ந்தெடுக்கலாம்.

2. வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயற்படுத்தி வருகிறது. ஹஜ் 2027 ஆம் ஆண்டிற்கான வழிமுறைகளை இந்திய ஹஜ் குழுவின் இணையதள முகவரி https://hajcommittee.gov.in அல்லது HAJ SUVITHA என்ற செயலியின் மூலம் கொள்ளலாம்.

இதையும் படிக்க : வார இறுதி நாட்கள், மொஹரம் பண்டிகை.. 1,829 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

பாஸ்போர்ட்டுக்காக புதிதாக விண்ணப்பிப்பவர்கள் குடும்ப பெயர்/கடைசி பெயர் ஆகியவற்றை காலியாக விடாமல் கண்டிப்பாக பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்கிற நிபந்தனை உள்ளது. மேலும் ஹஜ் 2027-ல் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள தேர்ந்தெடுக்கப்படும் புனிதப் பயணிகள் நபர் ஒருவருக்கு முதல் தவணைத் தொகையாக ரூ.1,52,300/- செலுத்த தயார் நிலையில் இருப்பதுடன் தங்களிடம் செல்லத்தக்க பாஸ்போர்ட் உள்ளதை உறுதி செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

3. ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 20.07.2026 ஆகும். மேலும் ஹஜ் பயணிகள் மரணம் அல்லது கடுமையான மருத்துவ நோய் தவிர வேறு கரணத்திற்காக பயணத்தை ரத்து செய்ய நேரிட்டால் அபராதம் விதிக்கப்படும். இதனால் விண்ணப்பதார்களுக்கு நிதி இழப்பு ஏற்படக்கூடும். எனவே நான் பயணம் மேற்கொள்ள விருப்பமுள்ளவர்கள். தங்களை தயார்நிலை மற்றும் ஹஜ் பயணத்தை மேற்கொள்வதற்கான உறுதிப்பாட்டை கவனமாக பரிசீலித்த பின்னரே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Follow Us