“உங்கள் வீட்டு பில்லே சாட்சி”.. கையடக்க பிரிண்டருடன் வளம் வரும் அதிமுகவினர்.. திமுகவுக்கு எதிராக புதிய பிரசாரம்..
AIADMKs Bill Witness campaign: அதில் அதிமுக ஆட்சியில் அரிசியின் விலை என்ன? தற்போது திமுக ஆட்சியில் அது எந்த அளவுக்கு இருக்கிறது என்பதில் ஆரம்பித்து பல்வேறு பொருட்களின் விலையை அச்சிட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது. அதிமுகவினர் ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.5.30 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுகவின் புதிய பிரசாரம்
சென்னை, பிப்ரவரி 22: திமுகவின் மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட திட்டங்களுக்கு பதிலடியாக அதிமுக ‘உங்கள் வீட்டு பில்லே சாட்சி’ என்று பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது. அதிமுக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எந்த தொகுதியில் போட்டியிடுவது, கூட்டணி கட்சிகளுக்கு எந்த தொகுதியை ஒதுக்குவது போன்ற பணிகளை நான் பார்த்துக் கொள்வேன். எனவே கட்சியினர் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க: “பணப்பெட்டியை வாங்கிக் கொண்டு திமுகவுடன் கூட்டணி”.. ஓபிஎஸ் மீது மரியாதை உள்ளது.. நயினார் நாகேந்திரன்
உங்கள் வீட்டு பில்லே சாட்சி பிரசாரம்:
ஏற்கனவே ‘உங்கள் வீட்டு பில்லே சாட்சி’ என்ற பிரச்சாரத்தை அதிமுக முன்னெடுத்துள்ளது. கடந்த மாதம் 28ம் தேதி இந்த பிரசாரத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதற்காக தமிழகம் முழுவதும் கட்சியினருக்கு 20,000 கையடக்க பிரிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன் மதிப்பு சுமார் ரூ.6 கோடி என்று கூறப்படுகிறது. அவர்கள் வீடு, வீடாகச் சென்று கடந்த அதிமுக ஆட்சி காலத்தையும், தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சி காலத்தையும் ஒப்பிடுகிறார்கள்.
5 ஆண்டுகளில் பொருட்களின் விலை உயர்வு:
கடந்த 5 ஆண்டுகளில் மின்கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு, விலைவாசி உயர்வு போன்றவற்றால் ஏற்பட்டுள்ள இழப்புகள் எவ்வளவு என்பதை ஒவ்வொரு வீட்டிலும் அவர்கள் சொல்லும் தகவல்களை வைத்து, அதனை கணக்கிட்டு, பிரிண்டரில் அச்சிட்டு அந்த பில்லை கொடுக்கிறார்கள். குறிப்பாக அந்த பிரிண்டரின் பட்டனை அழுத்தியவுடன், கடைகளில் தரும் பில்களைப் போல் ஒரு சிறிய நீளமான பில் பிரிண்டாகி வருகிறது.
ரூ.5.30 லட்சம் இழப்பு:
அதில் அதிமுக ஆட்சியில் அரிசியின் விலை என்ன? தற்போது திமுக ஆட்சியில் அது எந்த அளவுக்கு இருக்கிறது என்பதில் ஆரம்பித்து பல்வேறு பொருட்களின் விலையை அச்சிட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது. அதிமுகவினர் ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.5.30 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமுள்ள 2.20 ரேஷன் கார்டுகள் அடிப்படையில் மொத்தமாக தமிழக மக்களுக்கு ரூ.11.60 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறுகின்றனர்.
மேலும் படிக்க: வழக்கு போடுவியா? போடு நாங்கள் பார்க்காத மிசாவா? மதுரையில் மு.க.ஸ்டாலின் பேச்சு
மக்களுக்கு ஏற்படும் இழப்பு:
இந்த பிரச்சார பணி சரியாக நடக்கிறதா? என எடப்பாடி பழனிசாமி தினமும் தீவிரமாக கண்காணித்து வருகிறார். நேற்றுடன் மொத்தம் 1.04 கோடி வீடுகளில் இந்த பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்தப் பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதாவது மகளிர் உரிமைத்தொகை மூலம் மக்களுக்கு ரூ.1,000 கிடைப்பதை திமுக பிரச்சாரம் செய்கிறது. ஆனால் அவர்களுக்கு உண்மையாக ஏற்படும் இழப்பை நாம் எடுத்துச்சொல்ல வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.