அதிமுக அலுவலகத்தில் செயலாளர் தூக்கிட்டு தற்கொலை…என்ன காரணம்…போலீசார் விசாரணை!
Chennai Crime : சென்னையில் சைதாப்பேட்டை மேற்கு பகுதி அதிமுக செயலராக இருந்து வந்த நபர் கட்சி அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது செல்போனை கைப்பற்றிய போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

அதிமுக பகுதி செயலர் தூக்கிட்டு தற்கொலை
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை சனிக்கிழமை ( ஜனவரி 17) மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவுக்கான முன்னேற்பாடுகளை அதிமுகவினர் மேற்கொண்டு வருகின்றனர். இதே போல, சென்னை சைதாப்பேட்டை பகுதியில் எம்ஜிஆர் பிறந்த நாளுக்கான முன்னேற்பாடு பணிகளை சைதாப்பேட்டை மேற்கு பகுதி அதிமுக செயலாளர் ஆக இருந்து வந்த சைதை சுகுமார் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில், நேற்று வியாழக்கிழமை ( ஜனவரி 15) பிறந்தநாள் விழா பணிகளில் ஈடுபட்டு வந்த அவர் இரவு சைதாப்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் தூங்க செல்வதாக கட்சியினரிடம் கூறிவிட்டு சென்றார். இதே போல, கட்சியினர் அவரவர் வீடுகளுக்கு தூங்க சென்று விட்டனர். பின்னர் இன்று சனிக்கிழமை (ஜனவரி 16) காலை கட்சியினர் சைதை சுகுமாரை பார்ப்பதற்காக கட்சி அலுவலகத்திற்கு சென்றனர்.
கட்சி அலுவலகத்தில் பிணமாக தொங்கிய அதிமுக செயலர்
அப்போது, கட்சி அலுவலகத்தின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது கட்சியினர் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். ஏனென்றால், சைதாப்பேட்டை மேற்கு அதிமுக செயலாளர் சைதை சுகுமார் தூக்கு போட்ட நிலையில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். பின்னர், இது குறித்து கட்சியினர் குமரன் நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தூக்கில் இருந்து, சைதை சுகுமாரின் சடலத்தை மீட்டு உடல் கூராய்வுக்காக சென்னை கே. கே. நகர் பகுதியில் அமைந்துள்ள இ. எஸ். ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க: வேலூர் சிஎம்சி மருத்துவமனை மருத்துவர்கள் குடியிருப்பில் அமலாக்கத் துறை சோதனை…முக்கிய ஆவணங்கள் கைப்பற்றல்!
முதல் கட்ட விசாரணையில்…
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், மேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட விசாரணையில், சைதாப்பேட்டை மேற்கு பகுதி அதிமுக செயலாளர் சைதை சுகுமார் கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும், தற்கொலைக்கு இது தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தற்கொலை செய்து கொண்ட சைதை சுகுமாரின் செல்போனை கைப்பற்றிய போலீசார் அவர் கடைசியாக யாரிடம் பேசி உள்ளார் என்பது தொடர்பான ஆதாரங்களை திரட்டி வருகின்றனர்.
தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணமா
கடன் சுமையால் சைதை சுகுமார் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரிய வந்தாலும், இதுதான் உண்மையான காரணமா அல்லது மற்ற கட்சியினருடன் ஏதேனும் மோதல் போக்கு அல்லது சொந்த பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க: புகாரை திரும்ப பெறக் கோரி மிரட்டல்…பெண் இன்ஸ்பெக்டர் கைது…மற்றொருவருக்கு வலைவீச்சு!