AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பதவி பறிபோகும் – அதிமுக எம்எல்ஏகளுக்கு இன்பதுரை கடும் எச்சரிக்கை

சட்டமன்றத்தில் மே 13, 2026 நாளை தவெக அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருக்கிறது. ஆகும். கொறடா உத்தரவை மீறி செயல்படும் எம்.எல்.ஏ. மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால் பதவி பறிபோகும் என எம்.பி இன்பதுரை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பதவி பறிபோகும் – அதிமுக எம்எல்ஏகளுக்கு இன்பதுரை கடும் எச்சரிக்கை
விஜய் - எடப்பாடி கே பழனிசாமி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 12 May 2026 22:11 PM IST

சென்னை, மே 12 : சட்டமன்றத்தில் மே 13, 2026 நாளை தவெக அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருக்கிறது. இதற்கிடையில் சி.வி.சண்முகம் தலைமையிலான அதிமுக எம்எல்ஏகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி நியமித்த கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உத்தரவே சட்டபூர்வமானது ஆகும். கொறடா உத்தரவை மீறி செயல்படும் எம்.எல்.ஏ. மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால் பதவி பறிபோகும் என எம்.பி இன்பதுரை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதிமுக எம்எல்ஏகளுக்கு இன்பதுரை கடும் எச்சரிக்கை

இது தொடர்பாக இன்பதுரை தனது ஃபேஸ்புக் பக்கத்தில், அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ கொறடாவின் உத்தரவை மீறி செயல்படும் எந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் 10வது அட்டவணையின் கீழ் கட்சித் தாவல் தடை சட்டம் நிச்சயமாக பொருந்தும்.

இதையும் படிக்க : தவெக அரசு பெரும்பான்மை வாக்கெடுப்பில் பங்கேற்க தடை.. உச்சநீதிமன்றத்தில் திருப்பத்தூர் எம்எல்ஏ மேல்முறையீடு!

சட்டமன்றத்தில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கட்சியின் அதிகாரப்பூர்வ கொறடா வழங்கும் உத்தரவை மீறி வாக்களித்தாலோ, வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தாலோ, அல்லது நடுநிலை வகித்தாலோ, அது கட்சித் தாவலாகவே கருதப்படும். சிலர் தனி அணியாக செயல்படுவதாலோ அல்லது பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக கூறுவதாலோ, அவர்கள் தனியாக கொறடாவை நியமிக்க முடியாது.

இன்பதுறையின் ஃபேஸ்புக் பதிவு

அது சட்டப்படி செல்லாது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு மிகத் தெளிவாக வழங்கிய தீர்ப்பின்படி, ஒரு அரசியல் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைமைதான் சட்டமன்ற கொறடாவை நியமிக்க முடியும். சட்டமன்ற உறுப்பினர்கள் தாமாக ஒன்று கூடி கொறடாவை நியமிக்க முடியாது.

இதையும் படிக்க :  மக்களுக்கு இடையூறு – தொண்டர்களுக்கு தவெக கடும் எச்சரிக்கை

மேலும், உச்ச நீதிமன்றம் சட்டமன்றக் கட்சி மற்றும் அரசியல் கட்சி இரண்டும் வேறு எனவும், அரசியலமைப்பு சட்டத்தின் 10வது அட்டவணை அரசியல் கட்சியை தான் அங்கீகரிக்கிறது எனவும் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, அதிமுகவின் அதிகாரப்பூர்வ தலைமையான பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ள கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உத்தரவே சட்டபூர்வமானது ஆகும். எனவே, அதிமுகவின் அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவை மீறி செயல்படும் எந்த அதிமுக எம்எல்ஏவுக்கும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால், எம்எல்ஏ பதவி பறிபோகும் என்பதே சட்ட நிலை என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow Us